தினசரி ஏழு முறை திருவண்ணாமலையை கிரிவலம் வரும் சப்தகந்த அடியார் மாதத்தில் ஏழு நாட்கள் மட்டுமே உணவு உட்கொள்வாராம். மீதி நாட்களில் உண்ணா நோன்பு இருப்பாராம்.

எப்போதும் இவரது உடலில் இருந்து ஒருவித நறுமணம் வீசுமாம். இவரது தலைமுடி பொற்கம்பி இழைகளாக இருக்குமாம். ஆனால் இவைகள் தாமாக எப்போதும் உதிர்வதில்லையாம். மாத சிவராத்தி தொடங்கி ஏழு நாட்கள் இவர் கிரிவலம் செய்யத்தொடங்கும் காலம். இந்தக் காலங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முடி உதிருமாம்.

ஆனால் அப்படி உதிர்ந்தமுடிகள் நம் கண்களில் காண முடியாதாம். அந்தப் பொன் முடிகள் உதிர்ந்த இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றுமாம். இவ்வாறு ஏழு கிரிவலங்களிலும் ஏழு பொன்முடிகள் உதிர்ந்த இடங்களில் ஏழு சிவலிங்கங்கள் தோன்றின. அவை சப்தகந்த லிங்கங்கள் என்று அழைக்கப்பட்டன.

ஒவ்வொரு கிரிவலத்தின் போதும் இவர் தலைமுடி உதிர உதிர இறைவனே அவருக்கு காட்சியளித்து முதல் கந்தம் முற்றியது, இரண்டாம் கந்தம் முற்றியது என ஏழு கந்தங்களுக்கும் இறைவன் சொல்வாராம். அப்படி இறைவன் சொல்லிய இடங்களில் தோன்றிய லிங்கங்களே சப்தகந்த லிங்கங்கள் என்றும் கூறப்படுகின்றன

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Shares
Share This