நம் முன்னோர்கள் சொன்னதெல்லாம் வேத வாக்கியங்கள் தான். எப்படி படுத்துறங்க வேண்டும் எதில் படுத்துறங்கினால் என்ன பலன் என்றுக்கூட சொல்லியுள்ளனர். படித்து பயன்பெறுங்கள் ;

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை “மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

கம்பளிப் படுக்கை – குளிருக்கு இதம். குளிர் ஜுரம் நீங்கும்.

கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், ஜுரம் போகும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.

பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் ஜுரம் நீங்கும்.

ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.

மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.

தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.

பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.

இலவம்பஞ்சு படுக்கை – உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.

இரத்தினக் கம்பளம் – நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.

இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய்:

பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும். மூங்கில்நார் பாய் வீடு,அலுவலகங்களில் தடுப்புசுவர்,மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும்.

 

 

.

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Shares
Share This