மந்திரங்கள் தவறான கொள்கைக்கு பயன்படுத்தப் பட்டதால் மந்திரங்கள் மீதே கோபப்பட்ட துர்வாசர் மந்திரத்திற்கு சாபம் கொடுத்தார்.  மூன்று கோடி மந்திர தேவதைகளும், ஞானமுக்தி அடையும் பொருட்டு மந்திரங்களைக் கோஷித்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் அங்குவந்ததுர்வாச மகரிஷிஇவர்களின் நோக்கத்தை அறிந்து, பரிகசித்தார் 

ஞானத்தால் மட்டும் தான் பெறமுடியும் குருவிற்கு பணிவிடை செய்து, அவரது ஆசியைப் பெற்ற அத்யாத்ம வித்தையைப் பயின்று, பிரம்ம ஞானம் பெற்று, பின் பரமேஸ்வரனின் அனுக்கிரஹத்தால் மட்டும் தான்ஞானமுக்திபெற முடியும் என்று கூறினார்

துர்வாசருடைய கோபத்தைப் பொருட்படுத்தாத மந்திர தேவதைகள், திருமயிலையிலேயே தங்கி புஷ்கரணியில் ஸ்ரீ நாராயணனைத் குறித்து கடும் தவம் புரியத் தொடங்கினர்நைமிசாரணியம்துவாரகை முதலிய தலங்களுக்குச் சென்று தங்கள் தவத்தைத் தொடர்ந்தனர்.

ஒவ்வொரு இடத்திலும் அவர்கள் முன் ஸ்ரீ நாராயணன் தோன்றி  நீங்கள் துர்வாசரை விரோதித்துக்கொண்டு, அவரது கோபத்திற்கு ஆளானது மிகத்தவறு. என்னால் உங்களுக்கு சாயுஜ்ய முக்தி தர இயலாது. பரமசிவனால் மட்டும்தான் அது சாத்தியம். ஆகவே அவரை வழிபடுங்கள்எனக் கூறுகிறார்.

குரு சேவை செய்து, குரு பிரசாதமாக ஞான முக்தி அடைந்தால்தானே உங்களுக்கு வெற்றி கிடைத்ததாகும். எனக் கூறி கலகமூட்டி விடுகிறார். அதன் பலனாக துர்வாசரும் கடும் கோபம் கொண்டு கணபதியைத் தொழுகிறார்.

கணபதி பிரத்யட்சமானவுடன், முக்கோடி மந்திரங்கள் தம்மை அவமதித்ததையும், தூஷித்ததையும் கூறி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும்முன், பல இடையூறுகளை பண்ணவேண்டும் என்று கணபதியை வேண்டுகிறார். கணபதியும் துர்வாசரின் வேண்டுகோளுக்கினங்க, காவிரி நதியை அர்த்த ராத்திரியில், எல்லோரும் நித்திரை செய்து கொண்டு இருக்கும் சமயத்தில் வெள்ளத்தைப் பெருகச் செய்து,  அதில் மூழ்கடித்து, திணற அடிக்கிறார்.

இறுதியில் துர்வாசரிடம் சரணடைந்து, தாங்கள் செய்த தவறுக்காக வருந்துகிறார்கள். மேலும் அவரை போற்றி தோத்திரம் செய்தனர். பிறகு கணபதியை துதித்து வெள்ளத்திலிருந்து கரையேற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். கணபதியும், ஒரு பிரம்மச்சாரியாக வந்து, அவர்களைக் காப்பாற்றி, கரையேற்றி விட்டு, பிரம்ம வித்தையை பழிப்பதோ, வேத மார்க்கத்திற்கு விரோதமாக இருப்பதோ மகான்களை தூற்றுவதோ, மாபெரும் பாபச் செயலாகும். உங்கள் கர்வத்தை அடக்குவதற்காகத்தான் இந்த தண்டனையைக் கொடுத்தேன்.  என்று அவர்களிடம் கூறிவிட்டு, தமது சுய வடிவத்தைக்காட்டுகிறார்.

அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து தோஷம் நீக்கிய அகத்தியர் (Agastya):

தங்கள் தவறுகளை மன்னித்து முக்திக்கு வழிகாட்ட வேண்டும் என்று அவர்கள் கணபதியை வேண்ட, அவரும்,  துர்வாசரை அணுகி, முறையாக சிவ ஆராதனை செய்யும் வழியை கூறும்படி வேண்டுகிறார்கள். “அகஸ்தியர் வந்து உங்களுக்கு எல்லாம் விளக்குவார்.” என்று துர்வாசர் கூறிவிட்டு சென்று விடுகிறார்.

நான்கு நாட்கள் கழித்து, லோபா முத்திரையுடன், அகத்தியர் வந்து சேருகிறார்திரிகோடி மந்திரதேவதைகள் வேண்டுகோளின்படி, அவர்களுக்கு அத்யாத்ம வித்தையை உபதேசம் செய்து, முத்திரைகளை சொல்லித்தந்து, சிவபூஜா விதிகளையும், எல்லா மந்திர சாஸ்திரங்களையும் கற்றுக் கொடுக்கிறார் பின் அகத்தியர் தென்மேற்கு பகுதியில், மணலால், கணபதியை பிரிதிஷ்டை செய்ய,அக்கணபதியை பூஜை செய்தனர். பின்னர்  சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை செய்தனர்.

சஹஸ்ர நாமத்தால் அர்ச்சனை

த்ரி கோடீச ; த்ரிகோடீட்ய

த்ரிகோடி   பரிஸேவித:

த்ரிகோடிஸ்த: த்ரி கோட்யங்க:

த்ரிகோடி  பரிவேஷ்டித:”

இந்த சஹஸ்ரநாமத்தை திரிகோடி மந்திர தேவதைகளுக்கு அகஸ்தியர்  கற்றுக்கொடுத்தார். இவற்றையெல்லாம் கண்டு, திருப்தி அடைந்த துர்வாசர், கைலாசம் சென்று, விநாயகரிடம், திரிகோடி மந்திரதேவதைகளின் முக்திக்காக சிபாரிசு செய்ய, கணபதியும் பரமேஸ்வரனிடம் சென்று, ஸ்ரீ நாராயணனுக்கு அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படி முறையிட்டார். மூன்று கோடி மந்திர தேவதைகளும் ஐக்கியமாகி விட்டனர். அவர்களுக்கு ஞானமுக்தி (சாயுஜ்ய முக்தி) கிட்டி விட்டது.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at :[email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Shares
Share This