திருவெம்பாவை (Thiruvempavai) பாடல்கள் அருளிய மாணிக்கவாசகர் (Manikkavasagar)

திருவெம்பாவை (Thiruvempavai)  பாடல் 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

திருவெம்பாவை (Thiruvempavai) விளக்கம்:

    நாங்கள் எல்லோரும் உன் வாசலில் காத்திருக்கிறோம். மான் போன்ற பயந்த சுபாவம் உடைய நீ தைரியமாய் இன்னும் படுக்கையில் கிடக்கிறாய். இதில் வேறு, “”இனிமேல் நானே உங்களையெல்லாம் வந்து நாளை முதல் எழுப்புவேன்” என்று சொல்லியிருந்தாய். உன் வாக்கு வக்கின்றிப் போய்விட்டதே. இருட்டுப் போர்வையை விலக்கி வானமும் எழுந்துவிட்டதே! உனக்கு வெட்கமாய் இல்லையா? வான், நிலம் இன்ன பிறவும் இவற்றில் இருப்போரும் முழுமையாய் சிவனை உணர முடியாது.

  மரக்கிளை ஒருவன் நிற்கும் இடம் நோக்கி நீண்டு வந்து நிழல் தருவது போல், சிவன் நமக்கு கருணை காட்டுகிறான். அதிசயம் அல்லவா இது? இவ்வளவு சிறப்புடைய சிவனின் திருவடிகளைப் போற்றிப் பாடுகிறோம். அவை உன்னைப் பாதிக்கவில்லையா? பதிலில்லையா? எங்களிடம் வாய் திறந்தேனும்பேசுவாய்! சிவன் சிறப்பு உன் காதில் விழவிழ உன் உடலும் மனதும் குழையவில்லையா? போற்றுவோர்க்கும், தூற்றுவோர்க்கும் ரட்சகனான ஈஸ்வரனைப் போற்றிப் பாடுகிறோம், நீயும் கலந்துகொள்வாய் என்று எழுப்புகின்றனர் பெண்கள்.

தோழியர்: மான் போன்று அழகியவளே ! நீ நேற்று, “நாளை உங்களை நானே வந்து எழுப்புகிறேன்” என்று கூறிவிட்டு, வெட்கமே இல்லாமல் இன்று எங்கு போய்விட்டாய் ? இன்னுமா பொழுது புலரவில்லை ? வானுலகும், பூமியும், பிற எல்லாமும் அறிதற்கு அரிய பெருமான், தானே வந்து கருணையோடு நோக்கி நம்மை ஆட்கொண்டருளுகிறான். அவனுடைய வானென நெடிய கழலடிகளைப் பாடி வந்த எமக்கு பதில் சொல் ! உடல் உருகத் தொழாது இருக்கின்றாய் ! இது உனக்குத் தான் பொருந்தும் ! எங்களுக்கும் ஏனைய எல்லாருக்கும் ஒரு தலைவனான  சிவபெருமானைப் பாடு !

-திருவெம்பாவை தொடரும்….

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at :[email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

Add comment

Your email address will not be published. Required fields are marked *

Pin It on Pinterest

Shares
Share This