Fb. In. Tw. Be.

அருள்மிகுலோகநாதப்பெருமாள்திருக்கோயில், திருக்கண்ணங்குடி, நாகப்பட்டினம்.

மூலவர்: லோகநாதப்பெருமாள், சியாமளமேனிபெருமாள்
உற்சவர்தாமோதர நாராயணன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கையை இடுப்பில் கொண்டு கண்ணன்நிற்பதைப்போல்
தாயார்: லோக நாயகி (உற்சவர்: அரவிந்த நாயகி)
தல விருட்சம்: மகிழ மரம்
தீர்த்தம்: சிரவண புஷ்கரிணி
பழமை: 1000-2000 வருடங்களுக்கு முன்
ஊர்: திருக்கண்ணங்குடி
மாவட்டம்: நாகப்பட்டினம்
திருவிழா: கைகுண்டஏகாதசி
பாடியவர்கள்திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள்

மங்களாசாஸனம் வங்கமா முந்நீர் வரி நிறப் பெரியவாளரவி னனை மேவிச் சங்கமா ரங்கைத் தடமலருந்திச் சாம மாமேனி என் தலைவன்அங்கமாறைந்து வேள்வி நால் வேத மருங்கலைபயின்றெரி மூன்றும் செங்கையால் வளர்க்கும்துளக்கமில் மனத்தோர் திருக்கண்ணங் குடியுள்நின்றானே.

~ திருமங்கையாழ்வார்

தல சிறப்பு:

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். இத்தலத்தில் நடைபெறும் திருவிழாக்களில்“திருநீரணி விழா‘ என்பது சிறப்பான விழாவாகும். இந்த விழாவின் போது பெருமாள் விபூதி அணிந்துகொள்கிறார். இந்த நிகழ்ச்சி மூன்றே முக்கால்நாழிகை தான் நடைபெறும். இதற்கு அனைவரும்விபூதி அணிந்தே வருவார்களாம். உபரிசரவசுமன்னனுக்காக இந்த விழா எடுக்கப்பட்டது. சைவவைணவ ஒற்றுமைக்கு இந்த விழாஎடுத்துக்காட்டாகும்.

பொது தகவல்:

இத்தல இறைவனை பிரம்மா, கவுதமர், உபரிசரவசு, வசிட்டர், பிருகு, மாடரர், திருமங்கையாழ்வார்ஆகியோர் தரிசித்துள்ளனர். இங்குள்ள பெருமாள்உத்பல விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார்.

பிரார்த்தனை:

குழந்தை பாக்கியம் வேண்டி இத்தல இறைவனிடம்பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கண்ணனுக்குபால்பாயசம் நைவேத்யம் செய்து வழிபாடுசெய்கின்றனர்.

தலபெருமை:

பெருமாளின் 108 திருப்பதிகளில் இது 18வது தலம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இதுவும் ஒன்று. 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடிஇத்தல தீர்த்தத்தின் பெயரைக்கேட்டாலே சகலபாவங்களும் விலகி விடும் என்பதால் இப்பெயர்பெற்றது. இத்தல பெருமாளின் ஜென்ம நட்சத்திரம்திருவோணம். தாயார் லோக நாயகி முகமும், உற்சவர்அரவிந்த நாயகி முகமும் ஒரே மாதிரி இருப்பதுசிறப்பு. எல்லா திவ்ய தேசத்திலும் கருடாழ்வார்கைகளை குவித்து வணங்கும் நிலையில் இருப்பார். ஆனால் இத்தலத்தில் இரண்டு கைகளையும்கட்டிக்கொண்டு வைகுண்டத்தில் எழுந்தருளிஇருப்பதைப்போல் அருள் பாலிக்கிறார். “ஊராக்கிணறு, உறங்காபுளி, தேராவழக்குதிருக்கண்ணங்குடி‘ என்று இத்தலத்திற்கு திவ்ய தேசசிறப்பு பழமொழி உண்டு.

தல வரலாறு:

கிருஷ்ண பக்தியில் வசிஷ்டர் மிக சிறந்தவர். “கிருஷ்ணபிரேமை வசிஷ்டாய நாமா‘ என்றுசொல்வார்கள். ஒரு முறை வசிஷ்டர் வெண்ணெயில்கிருஷ்ணன் விக்கிரகம் செய்து, அதை தன் பக்திமேலீட்டால் இளகாமல் வைத்து பூஜை செய்து வந்தார். இந்த பக்தியை கண்ட கண்ணன், சிறு குழந்தைவடிவம் கொண்டு கோபாலனாக வசிஷ்டரிடம்சென்றார். அங்கு வசிஷ்டர் பூஜை செய்துகொண்டிருந்த வெண்ணெய் கண்ணனை அப்படியேஎடுத்து வாயில் போட்டு விழுங்கி விட்டார். இதைக்கண்ட வசிஷ்டர்,””அடே! அடே!”என விரட்டிசென்றார். திருக்கண்ணங்குடியை“கிருஷ்ணாரண்யம்‘ என புராணங்கள் கூறுகிறது. இங்கு மகிழ மரத்தின் அடியில் நிறைய ரிஷிகள் தவம்செய்து கொண்டிருந்தார்கள். வசிஷ்டரால்விரட்டப்பட்ட கண்ணன் இப்பகுதிக்கு ஓடி வந்தான். இவர் வருவதை தங்களது ஞான திருஷ்டியால் அறிந்தரிஷிகள் கிருஷ்ணனை பாசக்கயிற்றால்கட்டிப்போட்டனர். இவர்களது பக்திக்கு கட்டுப்பட்டகண்ணன்,””வசிட்டன் என்னை விரட்டி வருகிறான். வேண்டியதை சீக்கிரம் கேட்டுப்பெறுங்கள்”என்றார். அதற்கு ரிஷிகள்,””கண்ணா! நீ எங்களுக்கு தரிசனம்தந்தது போல் இத்தலத்திற்கு வருவோர்களுக்குதரிசனம் கொடுத்தருள வேண்டும்,”என வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கிணங்க கண்ணன்இத்தலத்தில் நிற்க, விரட்டி வந்த வசிஷ்டர்கண்ணனது பாதங்களை பற்றிக்கொண்டார். உடனேகோபுரங்களும், விமானங்களும் உண்டாகி விட்டன. இதையறிந்த பிரம்மனும் தேவர்களும் உடனே வந்துபிரமோற்சவம் நடத்தினர்.கண்ணன் கட்டுண்டு நின்றபடியால் “கண்ணங்குடி‘ ஆனது.

Post a Comment

You don't have permission to register