Fb. In. Tw. Be.

கரும்பு ஜுஸ்

தேவையான பொருட்கள்

கரும்பு-4கப் பொடியாக நறுக்கியது
இஞ்சி துன்டு-1 இன்ச்
எலுமிச்சை சாறு-1 டேபிள் ஸ்பூன்
சீனி- தேவைப்பட்டால்
தண்ணீர் -1/4 கப்

செய்முறை:

1. கரும்பு துண்டுகளை மிக்ஸி கப்பில் இஞ்சியுடன் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவும். பின்பு கைகளால் புழிந்து கொள்ளவும். பின்பு சல்லடையில் இருத்து கொள்ளவும்.

2. பின்பு மறுபடி அரைத்த கரும்புடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்துஅரைத்து சல்லடையில் பிளிந்து கொள்ளவும்.

3.கரும்பு சாறுடன் எலுமிச்சை சாறு சேர்த்து தேவைக்கு சீனி சேர்த்து பரிமாறவும்.

சுவையான ஆரோக்கியமான கரும்பு ஜூஸ் தயார்.

கரும்பு நம் உடம்பிற்கு உற்ற நண்பன்.

கரும்பு சாறு குடிப்பதால் புத்துணர்ச்சி பிறக்கும்.

கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது.

இது எலும்பு மற்றும் பல் பிரச்சனைகளில் இருந்து காப்பாற்றும்.

ஜீரண சக்தி பெர உதவும்.

கேன்சர் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

கரும்பு சாறு மிக ஆரோக்கியமானது. ஆனால் வெளியில் வாங்கி குடித்தால் சுத்தம் இருப்பதில்லை. ஆகையால் வீட்டிலே தயார் செய்வதை பற்றி பார்ப்போம்.

Post a Comment

You don't have permission to register