நமது அடிப்படை வாழ்க்கை குறிப்பு

94

நாமும்தெரிந்துகொள்வோம்

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது.

2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது.
கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை.

3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும்.

முடிந்தால் அன்று நாம் சாப்பாடு அடுத்தவருக்கு போடவேண்டும்.

4. காயத்ரி மந்திரத்தை
பிரயாணத்தின்போது, சொல்லுதல்கூடாது
சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும்.

5. கற்பூர ஹாரத்தி – சூடம்காண்பித்தல் பற்றி ..
சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு நான்கு தடவை சுத்தி காண்பிக்கவேண்டும்.

தொப்பிளுக்கு இரண்டு தடவை காண்பிக்கவேண்டும்
முகத்துக்கு ஒரு தடவை
கடைசியாக, முழு உருவத்துக்கும் மூன்று தடவை காண்பிக்க வேண்டும்.

6. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

7. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

8. சிவனுக்கு உகந்தது = வில்வம் ஆகும்
விஷ்ணுவிற்கு உகந்தது = துளசி ஆகும்
விநாயகருக்கு = அருகம்புல் ஆகும்
பிரும்மாவிற்கு உகந்தது = அத்தி இல்லை ஆகும்
இவைகளை மாற்றி மற்றவருக்கு வைத்து வணங்க கூடாது.

9. கலசத்தின் அா்த்தங்கள்
கலசம்(சொம்பு) − சரீரம்
கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் − நாடி & நரம்பு
கலசத்தின் உள் இருக்கும் தீா்த்தம் (நீர்) − இரத்தம்
கலசத்தின் மேல் உள்ள தேங்காய் − தலை
கலசத்தின் மேல் உள்ள தேங்காயை சுற்றியிருக்கும் மாவிலை − சுவாசம்
கலசத்தின் அடியில் இருக்கும் அரிசி & இலை − மூலாதாரம்
கூர்ச்சம் − ப்ராணம்(மூச்சு)
உபசாரம் − பஞ்சபூதங்கள்.

10.தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானம்…
சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை,
தயிர் சாதம், பலகாரம்
வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
ஆனி – தேன்
ஆடி – வெண்ணெய்
ஆவணி – தயிர்
புரட்டாசி – சர்க்கரை
ஐப்பசி – உணவு, ஆடை
கார்த்திகை – பால், விளக்கு
மார்கழி – பொங்கல்
தை – தயிர்
மாசி – நெய்
பங்குனி – தேங்காய்.

11. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாக
கிடைக்கும்.

12. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில் திருநீற்றை குழைத்து புசிகொள்ள கூடாது.

13. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )

14. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.

15. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

எந்தெந்த கிழமையில் எந்தெந்த கடவுளை வணங்குவது சிறப்பு? கடவுளை வணங்குவதற்கு நாள் நட்சத்திரம் ஏன் பார்க்க வேண்டும்?

ஞாயிறு – கண்ணுக்குத் தெரிந்த கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லி வணங்கலாம்.

திங்கள் – சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

செவ்வாய் – சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தில் ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

புதன் – பெருமாளை சேவிப்பது நன்மை தரும். துளசிமாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு ஸஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களைப் படிப்பதும் நன்மை தரும்.

வியாழன் – நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள் பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நன்மை தரும்.

வெள்ளி – மஹாலக்ஷ்மி வழிபாடு நன்மைதரும். கோபூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம், மஹிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

சனி – ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு உகந்தநாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறிதலுக்கு உகந்த நாள். விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்.