Fb. In. Tw. Be.

சோளமாவு அல்வா

தேவையானவை 

 சோள மாவு – 1/2 கப்

சர்க்கரை  – 1 & 1/4 கப்

தண்ணீர் – 2 & 1/2 கப்

எலுமிச்சை பழம் – 1

முந்திரி  – தேவையான அளவு

சிட்டிகை கேசரி பவுடர்

ஏலக்காய் – 2

நெய் – 1/4 கப்

செய்முறை 

 சோள மாவை ,  1 & 1/2 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து,  பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையை , 1 கப் தண்ணீர் சேர்த்து, பிசுக்கு பதம் வரும் வரை கொதிக்கவிடவும். பின் அதில் கரைத்த மாவை ஊற்றி, கை விடாமல் கிளறவும்.

மாவு வெந்து, சிறிது கட்டியாகுவது போல தெரியும், அனால் பின்பு ஒரே சீராக வெந்து, பளபளப்பாகும். அப்பொழுது அதில் எலுமிச்சை சாறு மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறவும்.

சிறிது சிறிதாக நெய்யையும் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவேண்டும்.

நன்றாக உருண்டு அல்வா பதம் வரவும் நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறவிடவும். மேலே வறுத்த முந்திரியை சேர்க்கவும் .

ஒரு மணிநேரம் கழித்து, அதனை துண்டுகளாக்கினால் சோளமாவு அல்வா ரெடி!!!


Post a Comment

You don't have permission to register