ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் வசியமாக்கும் மூலிகை!

411

ஆணுக்கு பெண்ணையும், பெண்ணுக்கு ஆணையும் வசியமாக்கும் மூலிகை!

வளர்ந்து வரும் நாகரீக வாழ்க்கையில் காதலிப்பவர்களும் சரி, திருமணமானவர்களும் சரி ஏதோ கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விடுவது சர்வ சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும், அற்புத மாந்திரீக மூலிகை பிரயோகம் ஒன்று பல நூற்றாண்டு காலமாய் இருந்து வருகிறது.

ஆண், பெண் இருவரிடமும் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் தோன்றும் போது இந்த மாந்திரீக மூலிகைப் பிரயோகம் செய்தால் இருவரையும் பிரிந்து விடாமல் தடுத்து ஒற்றுமையாய் சந்தோஷமாய் வாழ வகை செய்யும். இதில், ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் வசியம் செய்யும் இரண்டு வகை உண்டு.

வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று பேய் மிரட்டி என்னும் மூலிகையை விநாயகப் பெருமானை நினைத்து வணங்கி 9 இலையை பறித்து அதனுடன் வெள்ளைப் பூண்டு 3 பல் சேர்த்து அரைத்து கையில் வைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனை ஆண், பெண்ணின் உச்சந்தலையில் வைத்து தேய்த்து விட பெண் ஆணிடம் வசியமாகி என்றும் அவனை விட்டு பிரியமாட்டாள்.

இதே போன்று பெண், ஆணின் உச்சந்தலையில் தடவி விட ஆண் அவளிடம் வசியமாகி என்றும் அவளை விட்டு பிரியமாட்டான். இந்த மூலிகையில் ஆண், பெண் என்று இரு வகை உண்டு. ஆகையால் பெண்ணை வசியம் செய்வதற்கு ஆண் வகை மூலிகையையும், ஆணை வசியம் செய்வதற்கு பெண் வகை மூலிகையையும் பயன்படுத்த வேண்டும்.