எலுமிச்சையில் மாந்திரீகம்

1739

தேவ கனி என்று கூறப்படும் எலுமிச்சையில் அனைவரும் செய்ய கூடிய முறையில் ஒரு மாந்திரீக பயிற்சியை மாந்திரீக பயிற்சி முறை முடிந்ததும் அந்த எலுமிச்சையை தன்னுடனே வைத்திருக்க சகல காரிய சித்தியும் உண்டாகும். 

இதை வெள்ளி கிழமை காலை 6:15 க்கு ஆரம்பிக்கவும்.குளித்து வெள்ளை நிற அதை அணிந்து இருக்க வேண்டும். பெண்கள் வெள்ளை நிறம் கலந்த உடைகள் அணியலாம்.காமாட்சி விளக்கில் நல்லெண்ணை தீபமேற்றி ஒரு மர ஸ்டூலில் அல்லது மனையில் கிழக்கு முகமாக வைக்கவும். விளக்கில் இருந்து நாலடி தள்ளி தர்ப்பை புல் பாய் விரித்து அதில் மேற்கு பார்த்தவாறு அமராவும். வலது கையில் எலுமிச்சை கனியை வைத்து கொண்டு (கனியை பேரம் பேசாமல் வாங்க வேண்டும்-கனியில் கருப்பு புள்ளிகள் இல்லாமல் பார்த்து கொள்ளவும்) தீப ஒளியை பார்த்தவாறே அகத்தியர் மந்திரமான ” ஓம் ரீங் ஆகர்ஷய ஆகர்ஷய தேசிப்பழம் ஆகர்ஷய வாவா ஸ்வாகா” என 108 முறை ஜெபம் செய்து கனியை விளக்கின் பாதத்தில் வைக்கவும். மீண்டும் விரிப்பில் அமர்ந்து இடது கையை விரித்து அதில் வலது கையை வைத்து கண்களை மூடி புருவ மத்தியில் ஒரு நிலைப்படுத்தி அதே மந்திரத்தை முடிந்த வரை தியானிக்கவும்.சுமார் 15 நிமிடங்கள் அவ்வாறு செய்து முடித்ததும் எழுந்து விடலாம். அதே கனியை வைத்து கொண்டு தினசரி கூறியுள்ள நேரத்தில் தொடர்ந்து 90 நாட்கள் செய்து வர மந்திர சித்தி உண்டாகி விடும். 90 நாட்களுக்குள் விளக்கு பாதத்தில் வைத்த பழம் நகர்ந்து நம்மிடம் வந்து சேரும். இது 45 நாட்களிலேயே கை கூடி விட்டால் கூட மேற்கண்ட பயிற்சியை நிறுத்தி கனியை வைத்து கொண்டு தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். இந்த மந்திர பயிற்சியில் கனி வாடி கனத்து போகுமே அன்றி அழுகி விடாது. கையில் வந்து சேர்ந்த கனியை அடுத்த 60 நாட்கள் வரை வைத்து உபயோகிக்கலாம். ஒரு முறை மந்திரம் சித்தி ஆகிவிட்டால் பின்பு ஓரிரு நாட்களிலேயே அடுத்து செய்தால் கனி கைகளில் சேர்ந்து விடும். மிக உபயோகமான சக்தி வாய்ந்த முறை இது. பயிற்சி நாட்களில் மது,மாது,மாமிசம்,புகை போன்றவை அறவே கூடாது. பொதுவாக இந்த மந்திரம் 1.25 லட்சம் முறைகள் உருவேற்றி விட்டால் மந்திரம் நம்முடனே இருந்து தேவையான சமயத்தில் யாருக்காக வேண்டுமானாலும் இதை செய்து கொடுக்கலாம். சுபம் உண்டாகும்.