ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்!

777

ஐஸ்வர்யம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்!

நிலை வாசல் படியில் வெற்றிலையை இப்படி வைத்தாலே போதும் அளவில்லாத ஐஸ்வரியம் நம் வீட்டிற்கு வந்து கொண்டே இருக்கும்…

நம்முடைய வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அதற்கு முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் நம் வீட்டு வாசலையும் நிலைவாசல் படியையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். நிலைவாசல் படி எப்போதுமே வாசமாக இருக்க வேண்டும். நிலை வாசல் படியில் மஞ்சள் குங்குமமும், கோலமும் பார்க்கும்போதே கண்களைப் பறிக்கும் அளவிற்கு பளிச்சென்று இருக்க வேண்டும்.

அப்போது அந்த வீட்டில் ஐஸ்வர்யம் நிச்சயமாக குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும். இதோடு சேர்த்து நாம் ஐஸ்வர்யத்தை நம் வீட்டில் நிலை நிறுத்த மற்றொரு பரிகாரத்தையும் செய்யலாம். அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாகவே வெற்றிலைக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்கக்கூடிய சக்தி என்பது அதிகமாகவே உள்ளது. அதாவது லட்சுமி கடாட்சம் நிறைந்தது. வெற்றிலை வெற்றியை கொடுப்பதும் வெற்றிலை என்று இப்படி வெற்றிலைக்கு உண்டான பலன்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாம் வெற்றிலையை வாங்குவதற்கு கடைக்கு செல்கின்றோம்.

காசு கொடுக்கின்றோம் நம் கைகளில் வரக்கூடிய வெற்றிலை எந்த ஒரு சேதாரமும் இல்லாமல் கிழிசல் இல்லாமல் வந்தாலே அது நமக்கு பெரிய அதிர்ஷ்டம் தான். சில பேர் வெற்றிலையை வாங்க சென்றால் கூட அவர்களுக்கு, சுத்தமான கிழிசல்கள் இல்லாத வெற்றிலை கடைகளிலிருந்து கிடைக்காது. எப்போது பார்த்தாலும் காம்பு இல்லாமல் அல்லது ஓட்டை போட்ட வெற்றிலைகளாகவே கிடைக்கும் இப்படி நல்ல வெற்றிலையை கையில் வாங்க முடியாதவர்கள் ஒரு விதத்தில் துரதிர்ஷ்டசாலிகள் தான். ஆனால் இதை நினைத்து யாரும் வருத்தப்பட வேண்டாம்.

அதிர்ஷ்டமும் ஐஸ்வர்யமும் நம் பக்கம் வீச இந்த ஒரு பரிகாரம் போதும் அழகான ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள் கண்ணாடி டம்ளருக்கு உள்ளே இருப்பது கட்டாயம் வெளியே தெரிய வேண்டும் அந்த டம்ளர் முழுக்க தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும் அதில் மூன்று வெற்றிலைகளை அழகாக அடிக்க கொள்ள வேண்டும் டம்ளருக்குள் வட்டமாக காம்பு மேல் பக்கம் இருக்க வேண்டும் நுனிப்பகுதி டம்ளருக்கு உள்ளே தண்ணீருக்குள் இருக்க வேண்டும்.

கண்ணாடி டம்ளரில் வைத்திருக்கும் 3 வெற்றிலைகளுக்கும் நடுப்பக்கத்தில் தண்ணீரில் மூன்று கொட்டை பாக்குகளை போட்டு விடுங்கள் தயார் செய்த இந்த கண்ணாடி டம்ளரை அப்படியே உங்கள் வீட்டு நிலை வாசல் படியில் ஒரு ஸ்டூலின் மீது அல்லது நாற்காலியின் மீது வைத்து விடுங்கள் செருப்பு விடும் இடங்களில் எல்லாம் வைக்க வேண்டாம் தண்ணீரில் போட்டு இருக்கும் வெற்றிலை 2 அல்லது மூன்று நாட்கள் ஆனாலும் வாடாமல் அப்படியே இருக்கும்.

வெற்றிலை வாடிய பின்பு டம்ளரில் உள்ள பொருட்களை மாற்றினால் மட்டுமே போதுமானது தயார் செய்யப்பட்ட இந்த கண்ணாடி டம்ளர் வெற்றிலையோடு உங்கள் நிலை வாசப்படியில் இருக்கும் வரை நிச்சயமாக உங்கள் வீட்டிற்குள் அளவில்லாத ஐஸ்வரியம் வந்து கொண்டேதான் இருக்கும் இது ஒரு தாந்திரீக ரீதியான பரிகாரம் நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.