கர்மா நீங்க செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

279

கர்மா நீங்க செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

கர்ம வினையால் வாழ்க்கையில் கஷ்டப்படுபவர்கள் இந்த பொருளை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினாலே போதும். கர்மா கழிந்து போகும்.

நாம் செய்யக்கூடிய நல்லதுக்கும், கெட்டதற்கும் உண்டான வரவு செலவு கணக்குகளை அந்த இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். யாருக்கும் தெரியாமல் நீங்கள் தவறு செய்வதாக நினைத்துக்கொண்டு, பாவத்திற்கும் மேல் பாவத்தை செய்யாதீங்க. இன்று செய்யக்கூடிய தவறுக்கு நாளை தண்டனை கிடைக்கவில்லை என்றாலும், நீங்கள் செய்த தவறுக்கு உண்டான தண்டனையை அடையாமல் உங்களுடைய உயிர், உடலை விட்டு பிரியாது. இது நிதர்சனமான உண்மை.

நிறைய பேர் அனுபவத்தில் கூட இதை பார்த்து இருக்கலாம். ஆக கர்ம வினைகளை மொத்தமாக கழித்து கட்ட வேண்டும் என்றால் அதற்கு பரிகாரமே கிடையாது. கர்ம வினைகளை குறைப்பதற்கு தான் ஜோதிட ரீதியாக, ஆன்மீக ரீதியாக, தாந்திரீக ரீதியாக சில பரிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தப்பிக்கவே முடியாத கர்ம வினைகளால் வரக்கூடிய பிரச்சனையிலிருந்து நம்மை ஓரளவுக்கு தற்காத்துக் கொள்வதற்கு ஒரு சிறிய பரிகாரம் குறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.  அதற்கு முன்பாக கர்ம வினைகளை படிப்படியாக குறைக்க நாம் செய்ய வேண்டிய ஒரு சில விஷயங்களை பார்த்துவிடலாம்.

உங்களால் முடிந்த அளவு உங்களை விட வசதியில் குறைவாக உள்ளவர்களுக்கு முடிந்த உதவியை செய்யுங்கள். அன்னதானம் கொடுப்பது, துணிமணிகள் தானமாக கொடுப்பது, ஏழை குழந்தைகளுக்கு படிப்பில் உதவி செய்வது போன்ற உதவிகளை செய்து வரும்போது படிப்படியாக தானாக கர்மா குறைய தொடங்கும். இதோடு சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய வழிபாடு சிவ வழிபாடு. சிவசிவசிவ என்று சொல்லிக் கொண்டு சிவனின் பாதங்களைப் பற்றிக் கொண்டால் கர்மாவை கடந்து செல்லலாம்.

மேல் சொல்லக்கூடிய விஷயங்களோடு சேர்த்து இந்த பரிகாரத்தை செய்யும் போது கர்மாவினால் உண்டாக்கப்படும் கஷ்டம், நோய் நொடிகள் அனைத்தும் ஓரளவு குறையும். இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் மிளகு. சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்தும் மிளகு தான் பரிகாரத்திற்கும் பயன்படுத்த போகின்றோம். புதிய மிளகாக கடையிலிருந்து வாங்கி பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஒரு காட்டன் துணியில் புதியதாக வாங்கிய மிளகை ஒரு கைப்பிடி அளவு வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். வலது கையில் இந்த மிளகு முடிச்சு எடுத்துக்கொண்டு, அந்த மிளகு மூட்டை உங்களுடைய உச்சம் தலையில் படும்படி வைத்துக்கொண்டு நான் அறியாமல் செய்த தவறுக்கு உண்டான கெட்ட கர்ம வினைகள் அனைத்தும் என்னை விட்டு செல்ல வேண்டும் என்று இறைவனிடம் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு அந்த மிளகு மூட்டையை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கி விடுங்கள்.

தொடர்ந்து ஐந்து நாட்கள் இந்த மூட்டையை தலையணைக்கு அடியில் இருக்க வேண்டும். இரவு தூங்கும் போது எடுத்த தலையணைக்கடியில் வைத்துக் கொள்ளுங்கள். பகலில் முடிச்சை எடுத்து அலமாரியில் யார் கைக்கும் படாத இடத்தில் வைத்து விடுங்கள். ஐந்தாவது நாள் இரவு தூங்கி எழுந்த பின்பு காலை, இந்த முடிச்சை கொண்டு போய் அப்படியே ஊருக்கு வெளி பக்கத்தில் கால் படாத இடத்தில் போட்டு விட்டு வந்து விடுங்கள்.

ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்தால் அவர்களே இந்த முடிச்சை கொண்டு போடலாம். பெண்களால் ஊருக்கு ஒதுக்கப்பூர்வமாக இருக்கக்கூடிய இடத்தில் போக முடியாது. உங்களுடன் துணைக்கு யாரையாவது கூட்டிக் கொண்டு போய் கூட இந்த முடிச்சை, பரிகாரம் செய்த அந்த பெண்ணின் கையாலேயே தூர எறிந்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் பரிகாரம் செய்து விட்டு உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கிய மிளகு முடிச்சை அடுத்தவர்கள் கையில் கொடுத்து தூர போட சொல்லாதீங்க. எந்தக் கிழமையில் வேண்டுமென்றாலும் பரிகாரத்தை தொடங்கலாம். இது ஒரு சிறிய பரிகாரம் தான். ஆனால் இந்த தாந்திரீக பரிகாரம் உங்களுக்கு கர்ம வினையால் வரக்கூடிய கஷ்டங்களை போக்குவதற்கு ஒரு வழியை காட்டி தரும் என்பது குறிப்பிடத்தக்கது.