சந்திர பகவானை நினைத்து கடன் தீர செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

267

சந்திர பகவானை நினைத்து கடன் தீர செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் அம்மனுக்கு அதிக சக்தி இருக்கும். இவ்வளவு ஏன், சிவபெருமானே சக்தியில் அடக்கம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அப்படியிருக்கும் போது இந்த மாதம் வரும் ஒவ்வொரு விசேஷ நாளும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடி பிரதோஷம் என்று சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

அந்த வகையில் இன்று ஆடி பௌர்ணமி. இந்த பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்து இருக்கக்கூடிய நாள் இது. இந்த நாளில் அம்பாள் வழிபாடு செய்வது மிகவும் நல்லது. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

ஆடி பௌர்ணமி நாளில் சந்திர பகவானுக்கு செய்ய வேண்டிய இந்த பரிகாரத்தை ஆண்கள், பெண்கள் யார் வேண்டும் என்றாலும் செய்யலாம். மாலை 6.00 மணிக்கு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட வேண்டும். உங்கள் வீட்டிற்கு வெளியே சந்திர தரிசனம் கிடைக்கக்கூடிய இடத்தில் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யுங்கள். மாலை சந்திரன் உதயமான பின்பு, 7.00 மணிக்கு ஒரு தாம்பூல தட்டில் ஒரு மஞ்சள் நிற துணியை விரித்து வைத்து விட்டு, அதில் 1 கைப்பிடி பச்சரிசி, 1 கைப்பிடி கல் உப்பு, 1 ரூபாய் நாணயம், துளசி இலையை வைத்துவிட்டு சந்திர பகவானை பார்த்து உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் சுமை குறைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

குலதெய்வத்தையும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். 5 லிருந்து 10 நிமிடங்கள் தரையில் அமர்ந்து தியான நிலையில் முழு மனதோடு சந்திர பகவானை வேண்டி இந்தப் பிரார்த்தனையை செய்ய வேண்டும். மனதில் ஒரு துளி கூட சஞ்சலம் இருக்கக் கூடாது.

வேண்டுதலை முடித்துவிட்டு இந்த மஞ்சள் முடிச்சை ஒரு மூட்டையாக கட்டி அப்படியே நிலை வாசல் படியில் கொண்டு வந்து மாட்டி விடுங்கள். பிறகு கடனை அடைப்பதற்கு தேவையான முயற்சிகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும். அடுத்த மாதம் பௌர்ணமி வரை அந்த முடிச்சு நிலை வாசலிலேயே இருக்கட்டும்.

அடுத்த மாதம் பௌர்ணமிக்கு முந்தைய நாள் இந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் பொருட்களை கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். ஒரு ரூபாய் நாணயத்தை மட்டும் எடுத்து ஏதாவது ஒரு கோவிலில் உண்டியலில் சேர்த்து விடுங்கள்.

கடன் பிரச்சனை தீரும் வரை மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து வந்தால் படிப்படியாக உங்களுடைய கடன் சுமை குறைந்து கொண்டே வரும். இது சுலபமான தாந்திரீக பரிகாரம் தான். நம்பிக்கையோடு செய்தால் கோடி ரூபாய் கடன் கூட சுலபமாக அடைவதற்கு உண்டான வழியை அந்த சந்திர பகவான் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பார்.

அதிலும் ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினம். இந்த பிரபஞ்சமே நேர்மறை ஆற்றலால் நிறைந்திருக்கும். இப்படிப்பட்ட தினத்தில் நீங்கள் வைக்கக்கூடிய வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.