செல்வ விருத்தி தரும் தாந்த்ரீகப் பரிகாரம்!

466

செல்வ விருத்தி தரும் தாந்த்ரீகப் பரிகாரம்!

தொடர்ந்து பணப்புழக்கமும், செல்வ நிலையில் உயர்வும் தரும் இந்த தாந்த்ரீக பிரயோகம் மிக எளிமையான ஆனால் வலிமையான் ஒன்று. இதைச் சங்கடஹர  சதுர்த்தி அன்று வெள்ளை அல்லது மஞ்சள் நிற விரிப்பு விரித்துக் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து செய்ய வேண்டும்.

தேவையான பொருட்கள்:-

மஞ்சள் துண்டு ஒன்று

மஞ்சள் காட்டன் அல்லது பட்டுத் துணி

தேங்காய் ஒன்று

கொட்டைப்பாக்கு ஐந்து

கொட்டைப்பாக்கையும் தேங்காயையும் மஞ்சள்பொடி தடவி வைக்கவும். பின்னர் மஞ்சள் துண்டு, தேங்காய், ஐந்து கொட்டைப்பாக்கு இவற்றை மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கட்ட வேண்டும். அதற்குக் கற்பூரம், சாம்பிராணி தூபம், ஊதுவத்தி தூபம் கட்ட வேண்டும். இந்தப் பிரயோகத்தைச் செய்யும் பொழுது மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ  “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹா” என்ற மந்திரத்தை சொல்லியவாறு செய்யவேண்டும்.

பின்னர் சக்தி வாய்ந்த இந்த செல்வவசியத் தேங்காய் முடியை வீடு அல்லது கடையில் சுத்தமான இடத்தில் வைக்கச் செல்வம் பெருகத் துவங்கும். இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம். வீட்டாரைத் தவிர வெளி நபர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச்  செய்ய வேண்டும். வெளிநபர்கள் யாரிடமும் சொல்ல விரும்பினால் செய்த பின்னர் சொல்லிக் கொள்ளலாம்.

தினமும் அல்லது சங்கட சதுர்த்தி, திங்கள்கிழமை, வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் அதற்கு கற்பூரம், ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காட்டி வர சக்தி குறையாமல் இருக்கும்.