தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள் என்னென்ன தெரியுமா?

173

தனவசிய மாந்திரிக ரகசிய குறிப்புகள் என்னென்ன தெரியுமா?

 1. வலம்புரி சங்கின் சப்தம் கேட்டும் இடத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும்.
 2. பிராமணர்களுக்கு அன்னதானம் அளித்தால் சகல தோஷங்களும் நீங்கும், செல்வ செழிப்பு உண்டாகும்.
 3. மல்லிகை பூவை பணம் வைக்கும் இடத்தில் வைத்தால் பணம் பெருகும்.
 4. வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் துளசி செடி, வில்வம் மரம், நெல்லி மரம், மல்லிகை செடி வளர்த்து வந்தால் செல்வம் அதிகரிக்கும்.
 5. வீட்டில் அல்லது தொழில் செய்யும் இடத்தில் சாளகிராமம், ருத்திராட்சம், தாமரை பாதரசம், பசும்சாணம் வைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.
 6. தினமும் சுத்தமான பசும்சாண விபூதி நெற்றியில் உடலில் பூசிவந்தால் லக்ஷ்மி கடாஷம் உண்டாகும்.
 7. வீட்டு வாசல்படியில் நற்பவி என்று எழதி வைத்தால் நன்மைகள் நடக்கும்.
 8. வெள்ளிக்கிழமை அன்று வரும் பெளர்ணமி அன்று சுக்ர ஹோரையில் வில்வம், துளசி, செந்நாயுருவி செடிகளுக்கு முறையாக காப்புகட்டி இதன் வேர்களை தன்னிடம் வைத்து இருந்தாலும் வீட்டில் தொழில் செய்யும் இடத்தில் பணம் வைக்கும் இடத்தில் வைத்தாலும் அவன் பணக்காரனாவது உறுதி.
 9. கரையான்புற்று, பாம்பு புற்று, தேன்கூடு, குருவி கூடு இவைகனை கலைக்கக்கூடாது. கலைத்தால் குழந்தை பாக்கியம் உண்டாகாது.
 10. விளக்கேற்றிய பின் குப்பையை பெருக்கக் கூடாது. எச்சில் கையால் தலையை தொடக்கூடாது.
 11. வீட்டில் பப்பாளி மரம், கருவேப்பிலை செடி, வளர்க்க கூடாது. கருவேப்பிலை செடி ஆண்களுக்கும் பப்பாளிமரம் பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும்.
 12. நகம், தலைமுடி, மிதக்கும் தண்ணீரை குடிக்கக்கூடாது.

பகலில் உடலுறவு கொள்ளக்கூடாது. சிக்கு விழுந்த முடியுடனும் தலைமுடி விரித்துக் கொண்டும் இருக்கக் கூடாது.

தினம் தூய்மையான உடை அணிய வேண்டும். இருட்டிலும் விளக்கு இல்லாத இடத்திலும் படுத்து தூங்கக்கூடாது.