தொழில் வசியமாக செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

710

தொழில் வசியமாக செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

மாந்திரீக முறைகளில் மூலிகைகள் மட்டுமல்லாது, உயிர் ஜீவ வித்துக்களும் சேர்ப்பது உண்டு. அவைகளில் ஒன்று தான் இந்திர கோபம் என்னும் அதிய பூச்சி இனம்.

இந்திர கோபம் என்பது, பல்வேறு வசிய முறைகள், நீடித்த கலவியல் உறவு, மாயா ஜாலம் ஆகியவற்றை செய்வதற்கு பயன்படும் முக்கியமான மூலப்பொருட்களில் ஒன்று. ஏன், இதற்கு இந்த பெயர் என்றால், வசியம் செய்வதற்கு மற்றும் அதிசய செயல்களுக்கு இந்த பூச்சியைத் தொட்டால் இந்திரனுக்கு கோபம் வருமாம்.

அதாவது, இதனைக் கொண்டு எல்லோருமே வல்லவர்களாகிவிடுவார்கள். ஆகையால், தான் இதற்கு இந்திர கோபம் என்று பெயரிட்டுள்ளனர். மழைக் காலங்களில் செம்மண் பூமிகளில் பகல் நேரங்களில் இதனைக் காணலாம். அழகான சிவந்த நிறத்தில் வெல்வெட் பட்டு துணி போன்று இதன் மேல் இருக்கும்.

தொழில் வசிய மை எப்படி செய்வது?

வெள்ளெருக்கன் வேர்

வெள்ளை விஷ்ணு கிராந்தி வேர்

வெள்ளை காக்கணம் வேர்

இந்திர கோபம்

கோரோஜனை – 1 கிராம்

புனுகு – 1 கிராம்

குங்குமப்பூ – 1 கிராம்

பச்சைக் கற்பூரம் – 5 கிராம்

ஏரழிஞ்சி குழித்தைலம்

வளர்பிறையில் ஞாயிற்றுக்கிழமை அன்று மேற்கண்ட 3 மூலிகை வேர்களை சாப நிவர்த்தி விதிகளின் படி பறித்து வந்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதோடு, ஏற்கனவே சேகரித்து வைத்த இந்திர கோபம் சேர்த்து புதிய மண் பானையில் போட்டு வறுத்து கருக்கி கொள்ள வேண்டும்.

இதனுடன் ஏரழிஞ்சி குழித்தைலம் விட்டு 5 மணிநேரம் அரைத்து அதனுடன் கோரோஜனை, புனுகு, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஜாமம் இரண்டரை மணி நேரம் வரையில் அரைக்க வேண்டும். இதனை ஒரு செம்பு டப்பியில் பதனம் செய்ய வேண்டும்.

இதை ஒரு வாழை இலையில் வைத்து அவல், பொறி, கடலை, பழம், பாக்கு, தூப, தீபம் காண்பித்து தினந்தோறும் 1008 முறை வசிய மூல மந்திரத்தை சொல்ல வேண்டும்.

வசிய மூல மந்திரம்:

ஓம் நமோ பகவதே மனோ மயே, ஹ்ரீம், க்லீம், சகல ஸ்தாவர ஜங்கமம் மம வசம் ஆகரஸ்ய, ஆகர்ஸய ஹ்ரீம் ஸ்வாஹ

இந்த மந்திரத்தை தினந்தோறும் 1008 முறை 21 நாட்கள் வரையில் சொல்லி வர வசிய மை உயிர் பெரும். இதனை கொஞ்சம் எடுத்து நெற்றியில் திலகமிட்டு சென்றால், தொழில், வியாபாரம் பெருகும். வசியம் ஆகும். எப்போதெல்லாம் வெளியில் செல்கிறோமோ அப்பொதெல்லாம் நம்மை பார்ப்பவர்கள் நமக்கு மதிப்பும், மரியாதையும் கொடுப்பார்கள். மக்களின் மதிப்பை பெற்று பெரு வாழ்வு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.