நலம் தரும் தாந்த்ரீக பரிகாரம்: கடுகு எண்ணெய் பரிகாரம்!

509

நலம் தரும் தாந்த்ரீக பரிகாரம்: கடுகு எண்ணெய் பரிகாரம்!

சில பேருக்கு வாழ்க்கையில் வெற்றி என்பதே இருக்காது. நல்ல பெயரும் கிடைக்காது. ஆனால் அவர்கள் விடாமல் முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். கஷ்டப்பட்டு கொண்டே இருப்பார்கள். எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும், அந்த கஷ்டத்திற்கு இணையான பலனை பெற முடியாமல் தவித்து வருவார்கள்.

பட்ட கஷ்டத்திற்கு அர்த்தமே இருக்காது. இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள்…

இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் கடுகு எண்ணெய். இதற்கு பதிலாக வேறு எந்த எண்ணெயையும் பரிகாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது. பரிகாரம் செய்வதற்கு தேவையான கடுகு எண்ணெயை தேவையான அளவு வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். சுத்தமான கடுகு எண்ணெயாக இருக்கட்டும். சனிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

(ஆனால் சனிக்கிழமை அன்று எப்போதும் நாம் எந்த எண்ணெயையும் வாங்கக்கூடாது என்பதையும் இந்த இடத்தில் நினைவு கொள்ள வேண்டும். சாஸ்திரப்படி முன்கூட்டியே எண்ணெய் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.)

சனிக்கிழமை காலை தூங்கி எழுந்தவுடன் முகத்தை கழுவிக்கொண்டு பற்களை மட்டும் தேய்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். வாங்கி வைத்த கடுகு எண்ணெயை ஒரு அகலமான பாத்திரத்தில் சிறிதளவு ஊற்ற வேண்டும். இரண்டு குழி கரண்டி அளவு எடுத்து ஊற்றினால் கூட போதும்.

அந்த எண்ணெயில் உங்களுடைய முகம் பிரதிபலிக்கும். அதாவது எண்ணெயில் முகத்தை பார்த்தால் முகம் தெரியும். அந்த கடுகு எண்ணெயில் உங்களுடைய முகத்தை நீங்களே பாருங்கள். இரண்டு நிமிடம் போல பார்த்தால் கூட போதும். அதன் பின்பு அந்த எண்ணெயை கொண்டு போய் ஏதாவது ஒரு பெரிய மரத்திற்கு அடியில் ஊற்றி விட்டு வர வேண்டும்.

மரத்தடியில் இருக்கும் மண்ணை லேசாக தோண்டிவிட்டு இந்த எண்ணெயை ஊற்றிவிட்டு அதன் மேலே மண்ணை போட்டு புதைத்து விடுங்கள்.

உங்களுடைய வீட்டின் அருகில் எந்த மரம் இருந்தாலும் அதற்கு பக்கத்தில் இந்த எண்ணெயை ஊற்றலாம். தவறு கிடையாது. உங்கள் வீட்டிற்கு உள்ளேயே மரம் இருக்கிறது என்றாலும் பரவாயில்லை. அந்த மரத்திற்கு பக்கத்திலேயே இந்த எண்ணெயை ஊற்றலாம்.

எட்டு சனிக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள். எண்ணெயை கொண்டு போய் மரத்தடியில் ஊற்றிவிட்டு வீட்டிற்கு வந்து சுத்த பத்தமாக குளிக்க வேண்டும். அதன் பின்பு நவகிரக சன்னிதானம் இருக்கும் கோயிலுக்கு சென்று சனி பகவானை மனதார வணங்கி, இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி உங்களுக்கு இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.