நாம் விரும்பியவர்களை வசியம் செய்வது எப்படி?

273

நாம் விரும்பியவர்களை வசியம் செய்வது எப்படி?

நாம் வசியம் என்னும் தந்திரத்தை குறித்து கேள்விபட்டிருப்போம். ஆனால் எப்படி வசியம் செய்வார்கள் என்று நமக்கு தெரியாத ஒரு விஷயமாக தான் உள்ளது. தனக்கு நெருங்கியவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவரத்தான் வசியம் செய்கிறார்கள். இது மிகவும் எளியது தான். இதனை எப்படி செய்வது என்றும் என்னென்ன பொருள்கள் வேண்டும் என்றும் இந்த பதிவில் பார்க்கலாம்.

ஒருவேளை உங்களுடைய மனைவி கோபத்தில் இருந்தால் கூட இதை செய்து பார்க்கலாம். இதற்க்கு பெரிய செலவு ஒன்றும் இல்லை. எளிமையாக செய்து விடலாம். இதற்கு தேவையான பொருள் என்னவென்றால் சிகப்பு நிறப் பேனா, இரண்டு ஏலக்காய் . இந்த இரண்டு பொருட்களை கொண்டு ஏதாவது ஒரு சனிக்கிழமை இரவு 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த தாந்திரீகத்தை செய்யவேண்டும். இந்த நேரம் அனைவரும் ஆழ்ந்து உறங்க கூடிய சமயம் ஆதலால் நம்முடைய வேலைகள் அனைத்தும் அமைதியான சூழலில் நடந்து முடியும்.

அப்படி முடிந்தால் தான் நம்முடைய எண்ணங்கள் நேர்த்தியாக முடியும். அதற்காக தான் இந்த நேரத்தை பயன்படுத்துகிறார்கள். அதுபோல் இரவு 12 மணிக்கு செய்தால் ஏதாவது ஒரு தேவதைகள் மூலமாக ஏதாவது ஒரு வழியில் அந்த மனதிற்குள் ஒரு சில குழப்பங்களை ஏற்படுத்தி நம் வசம் வரவழைக்க முடியும். மேலும் இந்த தாந்திரீக வேலைகளை செய்வதற்கு பெரும்பாலும் சனிக்கிழமை தான் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் சனிக்கிழமை எல்லாருடைய மனமும் ஒன்று சேர்ந்திருக்கும்.

உங்கள் இடது உள்ளங்கையில் யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவர்களுடைய பெயரை வலது கையை வைத்து சிகப்பு நிற பேனாவால் எழுதி இடது உள்ளங்கையில் வைத்துக்கொள்ளுங்கள். அடுத்தவர்கள் பெயரை எழுதி விடக்கூடாது. நீங்கள் தான் எழுத வேண்டும். அதன்பிறகு பெயர் எழுதப்பட்ட இடத்தில் இரண்டு ஏலக்காய் வைக்க வேண்டும். அதில் இரண்டு ஏலக்காய் எடுத்து வைத்து காற்றே போகமுடியாத அளவிற்கு கையை இறுக்க மூடிக் கொள்ளுங்கள். அப்படி வைத்து விட்டு

ஓம் நமோ வாஸுதேவாய நம இன்னார் வசிய வசிய குருகுரு சுவாகா

ஓம் நமோ வாஸுதேவாய நம இன்னார் வசிய வசிய குரு குரு ஸ்வாஹா

என்ற மந்திரத்தை 551 தடவை சொல்ல வேண்டும். இப்படி சொல்லும் போது பத்துமுறை வந்ததும் ஒரு பூ எடுத்து போடுங்க. அடுத்த பத்து வந்ததும் அடுத்த பூவெடுத்து போடுங்க. இப்படி 50 முறை போட்டால் 551 குழுக்கள் வந்துவிடும். இவ்வளவு நேரத்திற்கு பிறகு மூடிய உங்கள் இடது கையில் வியர்வை பொங்கி இருக்கும். இந்த எழுத்துகள் எல்லாம் அழிய கூடிய ஒரு சூழ்நிலை வந்து இருக்கும்.

சிகப்பு பேனாவால் எழுதிய எழுத்துகள் அழிந்து பேனா மை அந்த ஏலக்காயில் படிந்திருக்கும். அந்த ஏலக்காயை நாம் யாரை நமக்கு வசியப்படுத்த வேண்டுமோ, அவர்களுக்கு ஏதாவது வழியில் கொடுங்கள். கொஞ்சம் நெருங்கியவர்களாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம். கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் ஒரு உடன்பாடு இல்லாமல் இருந்தால் அவர்களுக்கு பாலில் கலந்து கொடுத்தால் வசியப்பட்டு விடுவார்கள். இதனை நல்ல இனிப்புகளில் கூட கலந்து கொடுக்கலாம். இப்படி கலந்து கொடுப்பதால் அவர்கள் மனம் மாறி நம் பக்கம் வருவார்கள்.