மந்திரித்த முடிக்கயிறுகள்

1591

பல கோவில்களில், தர்காக்களில், மாந்திரீகர்களிடத்தில் பலர் மந்திரிக்கப்பட்ட முடிக்கயிறுகளை வாங்கி அணிந்திருப்பதை காணலாம். தேர்ந்த மந்திர உபாசனை உள்ளவர்கள் கொடுத்தால் மட்டுமே இது வேலை செய்யும். இதை பற்றி நன்கு ஆராய்ந்திருக்கிறேன். சிலர் இதனால் பயன் இல்லை என்று அறியாமையில் சொல்வதுண்டு. இதற்கு அறிவியல் ரீதியாகவும் விளக்கம் கொடுக்க என்னால் முடியும். நமது கைகளில் உள்ள நாடியில் தான் உடலில் உள்ள வாதம்,பித்தம், கபம் போன்றவற்றை அறிய முடியும்.மேலும் நாடியில் கிரகங்கள் சூரியன்,சந்திரன் மற்றும் குரு அமைந்துள்ளன. ஆகவே சிகப்பு,வெள்ளை, மஞ்சள் போன்ற முடிக்கயிறுகள் நம் நாடியில் பட்டு வர பல்வேறு பலன்கள் உண்டாகும். சிகப்பு அனுமனுக்கும் உகந்தது,மேலும் உடல் கோளாறுகள், மன கோளாறுகள் நீக்குவதிலும் இது சிறந்த பங்கு வகிக்கிறது. குறிப்பிட்ட வண்ணத்தை குறிப்பிட்ட தேவைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து தேவையான பீஜ மந்திரங்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உச்சரித்தவாரே முடி போடுதல் தான் முடிக்கயிறு. இதன் மூலம் பல காரியங்களை செய்ய முடியும். கருப்பு நிற கயிறு திருஷ்டி, குழந்தைகளின் தோஷங்கள், கிரக தோஷங்கள் மற்றும் செய்வினை போன்றவற்றிற்கும், சிவப்பு நிற கயிறு பல வித சித்து,வசியம் மற்றும் அதிர்ஷ்டத்திற்கும் உபயோகப்படுத்தலாம். தெய்வீக சக்திகளை பெற, சுபமுண்டாக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் கயிரும்,வெள்ளை உடலில் சக்திகள் விரயமாகாமல் தடுப்பதற்கும் பயன் படுத்த வேண்டும். சித்தர்கள், மாமுனிகள் பல முன்னோர்கள் புஜத்தில், கழுத்தில் மற்றும் கணுக்காலில் முடிக்கயிறுகள் உபயோகித்து வந்ததை நாம் யாவரும் அறிந்திருப்போம். 36,108,1008 என பல்வேறு எண்ணிக்கையில் முடிக்கயிறு இடலாம். இவற்றின் சக்தி குறிப்பிட்ட  கால அளவே இருக்கும்.பின்பு மாற்றி விட வேண்டும்.சூரிய உதயத்திற்கு முன் விடிகாலையில் சுத்தத்துடன் கட்டுபவரும், கட்டப்படுபவரும் வடக்கு முகமாக நின்று கட்ட சக்தி மிகும்.கிரகங்களுக்காக கட்டி கொள்வதென்றால் ஞாயிறு சிகப்பும், திங்கள் கிழமை வெள்ளையும்,வியாழக்கிழமை மஞ்சளும் நாமே கட்டி கொள்ளலாம்.பலன் தரும். இது போன்று விபூதி, குங்குமம் போன்றவற்றில் சக்திகள் ஏற்றி கொடுப்பதும் முறையில் உள்ளன.