வியாபாரத்தில் மந்தநிலை மாறி செழிப்பு ஏற்பட தாந்திரீக பரிகாரம்!

193

வியாபாரத்தில் மந்தநிலை மாறி செழிப்பு ஏற்பட செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்!

ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மறறும் வெள்ளிக்கிழமைகளில் ஒரு செம்பில் தண்ணீர் எடுத்து அதில் கொஞ்சம் பன்னீர் கலந்து ஒரு ஏலக்காய் போட்டு உங்கள் இஷ்ட தெய்வத்தின் மந்திரத்தை மனதிற்குள் ஜெபித்தபடி கிழக்குத் திசையில் இருந்து கடிகார சுற்றில் தெற்கு, மேற்கு, வடக்கு என எல்லா திசைகளிலும் தெளித்து விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பீடை, கண் திருஷ்டி, கண்ணேறு நீங்கி தொழில் விருத்தியாகும்.

மீதமுள்ள நீரைக்கொண்டு முகம் கழுவிக் கொள்ளவும். கடை மற்றும் வீட்டில் செய்து வர செல்வ வளம் சேரும் காலை பத்து மணிக்குள்ளும் அல்லது மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்ளாக இதனை செய்து வர வேண்டும். இவ்வாறு செய்து வர சபிக்‌ஷம் உண்டாகும்.