Fb. In. Tw. Be.

நுங்கு மேங்கோ மில்க் ஷேக்


ஹிமாயத் மாம்பழம் – 2 [ பெரியது ]
நுங்கு – 15
பால் – ½ லிட்டர்
சீனி – தேவையான அளவு
பாதாம் , பிஸ்தா – 50 கிராம்

செய்முறை விளக்கம் :

Start writing or type / to choose a block

நுங்கு மற்றும் மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பாதாம் மற்றும் பிஸ்தாவை நீளவாக்கில் வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பாலை காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் மாம்பழ துண்டுகளைப்போட்டு ஒரு அடி அடித்த பிறகு அதனுடன் பால் மற்றும் சீனி இவைகளை சேர்த்து நன்கு அடிக்கவும்.

அடித்த கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தேவைக்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டிய நுங்கையும் சேர்க்கவும்.

பிறகு அதனுடன் நீளவாக்கில் வாக்கில் வெட்டிய பாதாம் மற்றும் பிஸ்தாவையும் சேர்த்து கலக்கவும்.
பிறகு கப்புகளில் இதனை ஊற்றி பாதாம் மற்றும் பிஸ்தாவை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

Post a Comment

You don't have permission to register