15.08.2017 அன்று ஆடி மாதம் 30ஆம் நாள் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

0 535

15.08.2017 அன்று ஆடி மாதம் 30ஆம் நாள் ஸ்ரீ மகா சண்டி ஹோமம்

 நிகழும் ஸ்வஸ்திஸ்ரீ ஹேவிளம்பி வருடம் ஆடி மாதம் 30ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, அஷ்டமி திதி, கிருத்திகை நட்சத்திரம், [15.08.2017] கூடிய சுபயோக சுபதினத்தில், உலக மக்கள் யாவரும் எவ்விதமான நோய்களின்றி ஆரோக்கியமாக வாழவும், எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி ஐஸ்வர்யங்கள் பெருகி, மனநிம்மதியோடு நிறைவான வாழ்வு பெறவேண்டும் என்ற எண்ணத்தில் அம்பாளுக்கு உகந்த ஆடி செவ்வாய் நாளன்று, ஸ்ரீ மகா சண்டி ஹோமம் சென்னை, மடிப்பாக்கம், சதாசிவம் நகரில் அமைந்துள்ள லட்சுமி கோவிந்தராஜன் கல்சுரல் மஹால் என்னும் இடத்தில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

 ஆஸ்திக அன்பர்கள் யாவரும் இந்த வைபத்தில் கலந்து கொண்டு தங்களால் இயன்ற பொருளுதவி / பண உதவி செய்து எல்லாம் வல்ல ஆதிபராசக்தியாய் விளங்கும் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் அருளை பெறுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

சங்கல்பம் செய்து கொள்ள விரும்புவோர் Rs.500/-   செலுத்தி ரசிது  பெற்றுக்கொள்ளவும்.

மகா சண்டி ஹோமத்தில் பங்கு பெற்றால் கிடைக்கும் நன்மைகள்

  • குழந்தை பாக்கியத்தில் உள்ள தடைகள் விலகும்.

  •  திருமணத் தடைகள் விலகும்.

  • உத்தியோகத்திலும் வியாபாரத்திலும் நன்மைகள் பெருகும்.

  • பண கஷ்டங்கள் விலகி அஷ்டலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கும்.

  • எல்லா நோய்களும் நீங்கி ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும்.

  • வேண்டும் வரங்கள்  யாவும் அம்பிகையின் அருளால் சித்தியாகும்.

இன்று கடம்பாடி அருள்மிகு மாரி சின்னம்மன் திருக்கோயில்

நிகழ்ச்சி நிரல் நாள்

காலை 5.00  மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, ரக்ஷா பந்தனம்
காலை 6.00  மணிக்கு கலச பிரதிஷ்டை , ஸ்ரீ சக்ர மகா மேரு பூஜை
காலை 7.30  மணிக்கு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஹோமம், ஸ்ரீ சத்ரு ஸம்ஹர சுப்பிரமணியர் ஜபம் / ஹோமம்
காலை 10.00 மணிக்கு ஸ்ரீ துர்காசப்தசதி பாராயண, ஜப, ஸ்ரீ சண்டி நவாக்ஷரி ஹோமம்
பகல் 1.00  மணிக்கு மகா பூர்ணாஹுதி
பகல் 2.00  மணிக்கு கலச அபிஷேகம், தீபாராதனை, மஹாப்ரசாத விநியோகம்

 WhatsApp Image 2017-07-30 at 11.36.41

பொதுவாக ஸ்ரீ மகா சண்டி ஹோமம்  – பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு – பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும்செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

 ஒன்றே ஒன்று… எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தூய எண்ணத்துடன் இருந்து முழுமையான கடவுள் பக்தியை இடைவிடாமல் அனுசரித்து வந்தால், திருஷ்டியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். என்றாலும், திருஷ்டி விலக்குவதற்கு உண்டான பரிகாரங்களையும்  மேற்கொள்வது அவசியம்.

தொடர்புக்கு

கார்த்திக் விஸ்வநாதன்: 9003267533
A. சிவகுமார்  : 9840329441
அரவிந்த்        : 9003267588

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.