27 நட்சத்திரங்களும் அபிஷேகப் பொருளும்!

0 322

27 நட்சத்திரங்களும் அபிஷேகப் பொருளும்!

ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களும் அபிஷேகம் செய்ய வேண்டிய பொருள்கள்

   பஞ்சாங்கத் திற்கு அடிப்படையாக உள்ள வருடம், மாதம், சூரிய பயணம் உத்தராயணம், தட்சிணாயனம், ருது (பருவங்கள்), வாரம்-கிழமைகள், அதன் அதிபதி கிரகங்கள், சுக்லபட்ச (வளர்பிறை), கிருஷ்ணபட்ச(தேய்பிறை) திதிகள் மற்றும் ஜோதிடகலைக்கு மிக முக்கியமாக உள்ள நட்சத்திரங்கள் 27 ஆகியன.    
  இந்த 27 நட்சத்திரங்களும் தட்ச பிரஜாபதிக்கும் அசிக்கினிக்கும் பிறந்த பெண் குழந்தைகளாகும். தட்சன் இந்த 27 பெண்களையும் சந்திரனுக்கு மணமுடித்துக் கொடுத்தார். மனமுடிந்த சிறிது காலத்திலேயே சந்திரன் ரோகிணியின் மீது மட்டுமே பாசமும் நேசமும் கொண்டுள்ளார் என மற்ற 26 பெண்களும் தட்சனிடம் முறையிட, தட்சனோ, சந்திரனை அழைத்து அனைவரிடமும் எவ்வித பாகுபாடும் இல்லாமல் பழக வேண்டும் என்றார். அதனை செவி மடுக்காத சந்திரனை, ஆத்திரமடைந்த தட்சன் ‘சந்திரா எனது வேண்டுகோளை ஏற்காத காரணத்தால் உனது கலைகள் நாளா வண்ணம் குன்றிக் குறைந்து இல்லாமல் போகக் கடவதாக என சாபமிட்டார். 

  அந்த சாபத்தின் விளைவாக சந்திரன் தன ஒளி குறைந்து ஒவ்வொரு நாளும் தேய்ந்து கொண்டே வந்தான். தவமுனிவர்களின் உதவியை நாடிய சந்திரனை, தவ முனிவர்கள், பிரம்மாவிடம் அழைத்துச் சென்றனர். பிரம்மாவோ, பிரபாஸ ஷேத்திரத்தில் உள்ள சிவனை ஆராதித்து வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் என்று கூற, அதன்படி செய்த சந்திரனுக்கு காட்சியளித்த சிவபெருமான், “சந்திரா, பிராமணனாகிய தட்சன் கொடுத்த வாரத்திலிருந்து முழுமையாக உன்னை விடிவிக்க முடியாது, ஆயினும் ஒரு மாதத்தில் 15 நாட்கள் நீ வளரமும், 15 நாட்கள் நீ தேயவும் நான் அருள் புரிகிறேன்’ என்று கூறினார்.

 இதன் காரணமாகவே வர்பிறை, தேய்பிறை ஏற்பட்டது. இதன் பின்னரே சந்திரன் ஒரு நாளைக்கு ஒரு மனைவியிடம் செல்ல ஆரம்பித்தார். 

 இன்னின்ன நட்சத்திரங்களில்தான் இன்னின்ன காரியங்கள் செய்ய வேண்டுமென நியதி விதிக்கப் பட்டுள்ளது. உக்கிர சுபாவமுடைய அதி தேவதைகளை அதிபதிகளாகக் கொண்ட நட்சத்திரங்களில் எந்த காரியமும் செய்யக் கூடாது. இந்த பண்ணிரெண்டு நட்சத்திரங்களும் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கு அந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் கெட்டவர்களாக இருப்பதே காரணமாகும். இந்த நட்சத்திரங்களின் அதி தேவதைகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

1. அசுவினி – சுகந்த தைலம்

2. பரணி – மாவுப்பொடி

3. கார்த்திகை – நெல்லிப்பொடி

4. ரோகிணி – மஞ்சள்பொடி

5. மிருகசீரிடம் – திரவியப்பொடி

6. திருவாதிரை – பஞ்சகவ்யம்

7. புனர்பூசம் – பஞ்சாமிர்தம்

8. பூசம் – பலாமிர்தம் (மா, பலா, வாழை)

9. ஆயில்யம் – பால்

10. மகம் – தயிர்

11. பூரம் – நெய்

12. உத்திரம் – சர்க்கரை

13. அஸ்தம் – தேன்

14. சித்திரை – கரும்புச்சாறு

15. சுவாதி – பலச்சாரம் (எலுமிச்சை, நார்த்தம் பழச்சாறு)

16. விசாகம் – இளநீர்

17. அனுஷம் – அன்னம்

18. கேட்டை – விபூதி

19. மூலம் – சந்தனம்

20. பூராடம் – வில்வம்

21. உத்திராடம் – தாராபிஷேகம்.
(லிங்கத்திற்கு மேல் ஒரு பாத்திரத்தில் சிறு துவாரமிட்டு, சொட்டு சொட்டாக நீர் விழ செய்வது)

22. திருவோணம் – கொம்பு தீர்த்தம்

23. அவிட்டம் – சங்காபிஷேகம்

24. சதயம் – பன்னீர்

25. பூரட்டாதி – சொர்ணாபிஷேகம்

26. உத்திரட்டாதி – வெள்ளி

27. ரேவதி – ஸ்நபனம் (ஐவகை தீர்த்தங்களால் அபிஷேகம் செய்தல்

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.