ஆடம்பரத்தை தவிர்த்து எளிமையை கடை பிடித்த பெரியவா

0 244

  மஹா பெரியவா பெரியவரின் தரிசனத்திற்காக அம்மாவும்  பெண்ணும் வந்து நின்றார்கள் . ஒரு தட்டில் இருந்த மஞ்சள் , குங்குமம் , பழம் , பாக்கு., தேங்காய் , புஷ்பம் அதற்கு மேல் திருமாங்கல்யம்  என்று அந்த பெண்ணின் திருமணத்தை  பறை சாற்றியது. இன்னொரு  தட்டில்  கூரை ப்புடவையையும்  அந்த  அம்மாள் எடுத்துவைத்தாள் . ஜீவ இம்சை என்பதாலும்  அது தேவையற்ற  ஆடம்பரம் என்றும் பெரியவர்  பட்டு உடைகளை  விரும்புவதில்லை  என பலர்  அறிந்ததே . அதை  அறியாததால்  அந்த அம்மாள்  அரக்கு  நிற  கூரை ப்புடவையை  தட்டில்  வைத்து  ஆசிக்காக காத்திருந்தாள்.

maha periyava kanchi swamigal

ஆனால்   மடத்து சிப்பந்திகளுக்கு  மனம் ஒப்பவில்லை. அதனால் புடவைத்  தட்டை   ஒரு  பக்கம்  ஒதுக்கிவிட்டு  மற்ற  மங்கல  திரவியங்கள்  உள்ள  தட்டை  மட்டும்  பெரியவர்  ஆசிக்காக  நகர்த்தினார்கள் .  உடனே அந்த அம்மாள்  ஆதங்கத்துடன்  கடினமான  வாக்குக்குவாதம்  செய்ய ஆரம்பித்து விட்டார் .

 அப்பொழுது பெரியவர் உள்ளிருந்து நடப்பதை  கேட்டபடி  வெளியே   வருகிறார்.   ஆமாம் , புடவையை நகர்த்திதான் வைக்கணும்  என்பதுபோல் கூறினார்.. அங்கே இருந்தவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி. யார் தவறு செய்தாலும் அவர் மனம்   லேசாக நோகும்படியாக கூட  பெரியவர் என்றுமே சொன்னதில்லை , செய்ததில்லை.  அவரே  கூறைப்புடவையை  தள்ளி வைத்துவிட்டாரே .

 பெரியவர்  மடத்து சிப்பந்தியிடம்  ஒரு குச்சியை  கொண்டு  வரச்சொல்கிறார்.. ஒதுக்கிவைக்கப்பட்ட  பட்டுப்புடவையின்  மடிப்பை குச்சியால் விரிக்க , அங்கே  இருந்த  பக்தர்கள்  அச்சமுறும்  வகையில்  ஒரு பெரிய கருந்தேளும்  இரண்டு  குட்டி தேள்களும்  காணப்பட்டன.. இதனால்தான் ஒதுக்க சொன்னேன்  என்பதுபோல்  அந்த  பெண்ணை  பார்த்துவிட்டு , மடத்து  சிப்பந்தியிடம்  அந்த ஜீவராசிகளை  வெளிய கொண்டுவிடும்படி  கூறுகிறார்.

 பிறகு  அந்தப்பெண்ணிடம்  , கூரைப்புடவை  அரக்கில்  இருக்கக்கூடாது .  மஞ்சளோ, வேறே  மங்கலகரமான கலரோ  வாங்கிக்கோ . இங்கே  நடந்ததை யெல்லாம்  கடைக்காரனிடம்  சொல்லவேண்டாம்  என்று சொல்லி என்று  ஆசிர்வதித்தார் தான்மறுக்கும் பட்டுத்துணி தேளின் விஷத்திற்கு சமமானவை என்று அனைவருக்கும் புரியும்படியும், தேவையற்ற ஆடம்பரத்தை விருப்புவதில்லை என்றும் அனைவருக்கும் புரியும்படி செய்தார் பெரியவா

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.