குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்!

89

குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை என்ற ஊரில் உள்ள கோயில் சுவாமிநாத சுவாமி கோயில். இந்தக் கோயிலில் சுவாமிநாத சுவாமி கோயில் மூலவராக காட்சி தருகிறார். சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாளும் துர்க்கைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்படுகிறது. தைப்பொங்கலன்று சாகம்பரி என்ற காய்கறி பழ அலங்காரத்தில் அம்பிகை காட்சி தருவாள்.

வைகாசி விசாகத்தை ஒட்டி பிரம்மோற்சவம், சூரம்சஹார விழா 7 நாள், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியன முக்கிய விழாக்கள் ஆகும். திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக இங்குதான் சூர சம்ஹார திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்தக் கோயிலில் 11 தலை 22 கைகளுடன் காட்சி தருகிறார். கோயிலுக்குள் 18 திருக்கரத்துடன் கூடிய 7 அடி உயர துர்க்கை சிலையும் உள்ளது. இத்தலத்தில் உள்ள வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டு தீர்த்தம் சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் முருகனுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். சூரபத்மனை வதம் செய்வதற்கு முன்பே முருகன் இத்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது முருகனுக்கு 11 தலை 22 கைகள் இருந்ததாக தல வரலாறு கூறுகிறது.

அதே வடிவில் விஸ்வரூபம் எடுத்த நிலையில் முருகப் பெருமான் அருள் பாலிக்கிறார். மற்ற கோயில்களில் எல்லாம், பிரணவ மந்திரத்தின் பொருள் கூற முருகன் சிவனின் மடியில் அமர்ந்திருப்பது போன்று சிலை இருக்கும். ஆனால், இத்தலத்தில் தகப்பன் சுவாமியான முருகன் குன்றின் மீது அமர்ந்து பிரணவ மந்திரத்திற்கு பொருள் சொல்ல, சிவன் அதை நின்று கேட்கும் நிலையில் அமைந்துள்ளது. முருகனே சிவன், சிவனே முருகன் இருவரும் ஒருவரின்றி வேறில்லை என்பதற்கேற்ப இங்கு தகப்பன் சுவாமி குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பது மிகச்சிறப்பான அம்சமாகும்.

ராமநாதபுரத்தில் வாழ்ந்த பாஸ்கர சேதுபதி 300 ஆண்டுகளுக்கு முன்பு குண்டுக்கரை முருகன் கோயிலுக்குச் சென்று தினமும் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை இவர் சுவாமிமலை சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்த போது இவரது கனவில் சுவாமிமலை முருகன் தோன்றி குண்டுக்கரை முருகன் கோயிலில் உள்ள பழைய முருகன் சிலையை எடுத்து விட்டு புதிதாக முருகனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால் உனக்கும், உனது மக்களுக்கும் நன்மை உண்டாகும் என்று கூறி மறைந்தார்.

ராமநாதபுரம் வந்த பாஸ்கர சேதுபதியும் கனவில் முருகன் கூறியபடி குண்டுக்கரை சென்று அந்த கோயிலிலிருந்து பழைய முருகன் சிலையை அகற்றிவிட்டு புதிதாக முருகன் சிலை பிரதிஷ்டை செய்தார். சுவாமி மலையானின் பெயரான சுவாமிநாதன் என்று பெயர் சூட்டினார்.