குபேரனுக்கு சாப விமோசனம் அளித்த வைந்தமாநிதி பெருமாள்!

151

குபேரனுக்கு சாப விமோசனம் அளித்த வைந்தமாநிதி பெருமாள்!

தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் இக்கோவில் ஆழ்வார் தீருநகரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் 8 ஆம் இடமாக செவ்வாயை குறிக்கும் தலமாக இக்கோவில் அமைந்துள்ளது.

ஆலயத்தின் சிறப்பு:

வைத்தமாநிதி பெருமாள் கோவில் அல்லது திருகோளூர் என்று அழைக்கப்படும் இந்த கோவில் விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தலம். ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யபப்ட்ட 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கிறது.

வைந்தமாநிதி பெருமாள்:

இங்கிருக்கும் மூலவருக்கும் வைத்தமாநிதி பெருமாள் என்றும் இங்கிருக்கும் லட்சுமி தேவிக்கு கோளூர் வல்லி என்பதும் திருப்பெயராகும். நவதிருப்பதி என்பது பெருமாளின் ஒன்பது கோவில்களில், பெருமாளே கிரகங்களாக பாவிக்கப்பட்டு அருள் வழங்குகிறார்.

குறிப்பிட்ட தோஷம் இருப்பவர்கள் குறிப்பிட்ட கோவில்களுக்கு, ஒரு சிலர் ஒரு யாத்திரையாக நவதிருப்பதிகளுக்கும் செல்வது வழக்கம். அதன்படி ஶ்ரீவைகுண்டம் (சூரியன்), வரகுணமங்கை (சந்திரன்), திருக்கோளூர் (செவ்வாய்), திருப்புளியங்குடி (புதன்), ஆழ்வார்திருநகரி (குரு), தெந்திருப்போரை (சுக்ரன்), பெருங்குளம் (சனி), தொலைவில்லி மங்களம் (ராகு), தொலைவில்லி மங்களம் (கேது) ஆகிய தலங்கள் நவதிருப்பதிகளாக சொல்லப்படுகின்றன். அதிலும் குறிப்பாக செவ்வாயை குறிக்கும் இந்த திருக்கோளூர் கோவில்.

புராண கதை:

இத்திருக்கோவிலுக்கு ஒரு புராண கதையும் உண்டு. அது என்னவென்றால், பார்வதி தேவியில் குபேரனுக்கு ஒரு சாபம் நேர்ந்த போது அவனை விட்டு அனைத்து நிதிகளும் விலகின. விலகிய நிதிகள் பெருமாளிடம் அடைக்கலம் புகுந்தன. பின் குபேரன் இங்கே பெருமாளை வணங்கி சாப விமோசனம் பெற்று அந்த நவநிதிகளை மீண்டும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

சயன கோலத்தில் காட்சியளிக்கும் மூலவர்:

இந்த திருத்தலத்தில் சயன கோலத்தில் இருக்கும் பெருமாளின் வலது தோளுக்கு கீழ் மாநிதிகளையும் வைத்து பாதுகாத்து வருவதை இன்றும் தரிசிக்கலாம். மா நிதிகளை தன் வசம் வைத்திருப்பதாலே இவருக்கு வைத்த மாநிதி என்ற திருப்பெயர். அதிலும் அரிதாக தன்னுடைய இடது கையின் உள்ளங்கையின் மூலம் மாநிதிகளை கண்ட வாறே சயன கோலத்தில் பெருமாள் இருக்கும் தரிசனத்தை நாம் இங்கு காண முடியும்.

தோஷங்கள் நீங்கும்:

குபேரனுக்கே நிதி கிடைத்த தலம் இதுவென்பதால், இங்கே வந்து வழிபடுவோருக்கு பொருளாதார மேன்மை ஏற்படும் என்பது ஐதீகம். மற்றும் செவ்வாய் தொடர்பான பிரச்சனைகள், தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.