கேது தோஷம் நீங்க நீலகண்டேஸ்வரர் வழிபாடு!

353

கேது தோஷம் நீங்க நீலகண்டேஸ்வரர் வழிபாடு!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் யாவுமே 9 கிரக நிலைகளின் அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த ஒன்பது கிரகங்களும் நவக்கிரகங்கள் என்றழைக்கப்படுகிறது.

9 கிரகங்கள் (நவக்கிரகங்கள்):

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. செவ்வாய்
  4. புதன்
  5. குரு
  6. சுக்கிரன்
  7. சனி
  8. ராகு
  9. கேது

இதில், ஒரு சில மட்டுமே உண்மையான கோள்கள். ராகு மற்றும் கேது ஆகியவை நிழற் கோள்கள். அதாவது இல்லாத கிரகங்கள். சூரியன் ஒரு விண்மீண். சந்திரன் பூமியின் துணைக்கோள். பொதுவாக நாம் அனுபவிக்க க் கூடிய இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்து கொள்கிறோம். அதுவும், நவக்கிரகங்களுக்கு தான் நாம் பரிகாரம் செய்கிறோம். உதாரணமாக, நீதிமானான சனி பகவானுக்கு நவக்கிரகத்திற்கு தான் அர்ச்சனை செய்து, வழிபாடு செய்கிறோம்.

நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்களாக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தாலும் நவக்கிரகங்களுக்கு தான் நாம், அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். சரி, தமிழகத்தில் இருக்கக்கூடிய நவக்கிரக கோயில்கள் பற்றி இந்தப் பதிவில் பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் ராகு பகவானுக்குரிய கோயில்கள் பற்றி பார்த்தோம். தற்போது கேது பகவானுக்குரிய வழிபாட்டு தலம் பற்றி இந்தப் பதிவில் பார்போம்…

கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோயில்:

சென்னை போரூர் அருகிலுள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் கோயில் கேது பகவானுக்குரிய தலமாக விளங்குகிறது. வட கீழ்பெரும்பள்ளம் என்றும் அழைக்கிறார்கள். இந்த கோயிலில் நீலகண்டேஸ்வரர் மூலவராகவும், உடனுறை ஆதி காமாட்சி அம்மனும் இருக்கிறார்கள். நாக தோஷம் உள்ளவர்களுக்கு அதனை நீக்கும் ஒரு சக்தி வாய்ந்த தலமாக இந்த கோயில் கருதப்படுகிறது.

இந்த கோயிலில் கேது பகவான் தனிச் சன்னதியில் காட்சி தருகிறார். இதற்கு முன்னதாக இந்த கோயிலுக்கு அழகிய சோழ நல்லூர் என்று பெயர் இருந்தது. கேது பகவான் வழிபட்ட தலம் இது. கேது தோஷங்கள் நீங்க இந்த கோயிலில் தரிசனம் செய்யலாம். எமகண்ட வேளையில் கேது பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த கோயிலில் சூரியனை கேது பகவான் விழுங்குவது போன்ற ஒரு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதற்கு கீழ் நின்று நீலகண்டேஸ்வரர் மற்றும் அம்பிகையை தரிசனம் செய்தால் கேது பகவானால், ஏற்பட்ட தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இந்தப் பதிவின் மூலம் 9 நவக்கிரகங்களுக்கான கோயில்கள் சென்னையில் எங்கெல்லாம் இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொண்டோம்….

அந்தந்த தோஷம் உள்ளவர்கள் அதற்குரிய வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டு வருவது நன்மை பயக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.