சுக்ரன் பகவானுக்குரிய கோயில் திருவல்லீஸ்வரர்!

310

சுக்ரன் பகவானுக்குரிய கோயில் திருவல்லீஸ்வரர்!

பொதுவாக நாம் வாழும் போது நமது வாழ்க்கையில் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் யாவுமே 9 கிரக நிலைகளின் அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த ஒன்பது கிரகங்களும் நவக்கிரகங்கள் என்றழைக்கப்படுகிறது.

9 கிரகங்கள் (நவக்கிரகங்கள்):

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. செவ்வாய்
  4. புதன்
  5. குரு
  6. சுக்கிரன்
  7. சனி
  8. ராகு
  9. கேது

இதில், ஒரு சில மட்டுமே உண்மையான கோள்கள். ராகு மற்றும் கேது ஆகியவை நிழற் கோள்கள். அதாவது இல்லாத கிரகங்கள். சூரியன் ஒரு விண்மீண். சந்திரன் பூமியின் துணைக்கோள். பொதுவாக நாம் அனுபவிக்க க் கூடிய இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்து கொள்கிறோம். அதுவும், நவக்கிரகங்களுக்கு தான் நாம் பரிகாரம் செய்கிறோம். உதாரணமாக, நீதிமானான சனி பகவானுக்கு நவக்கிரகத்திற்கு தான் அர்ச்சனை செய்து, வழிபாடு செய்கிறோம். ஆனால், சனி பகவானுக்குரிய கோயில்கள் என்னவோ திருநள்ளாறு மற்றும் குச்சனூர் தான்.

நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்களாக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தாலும் நவக்கிரகங்களுக்கு தான் நாம், அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். சரி, தமிழகத்தில் இருக்கக்கூடிய நவக்கிரக கோயில்கள் பற்றி இந்தப் பதிவில் பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன் மற்றும் குரு பகவானுக்குரிய கோயில்கள் பற்றி பார்த்தோம். தற்போது சுக்கிரன் பகவானுக்குரிய வழிபாட்டு தலம் பற்றி இந்தப் பதிவில் பார்போம்…

சென்னை அருகிலுள்ள மாங்காட்டில் உள்ள மிகவும் பழமையான கோயில் திருவல்லீஸ்வரர் (வெள்ளீஸ்வரர்). இந்த கோயில் தான் நவக்கிரகங்களில் ஒருவரான சுக்கிர (சுக்ரன்) பகவானுக்குரிய ஸ்தலமாக விளங்குகிறது. சுக்ரன் அல்லது சுக்கிராச்சாரியாரால் திருவல்லீஸ்வரர் பூஜிக்கப்பட்டுள்ளார். ஆதலால், இத்தல இறைவன், தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.

பார்க்கவேஸ்வரர் என்பதால், கண் தொடர்பான குறைபாடு உள்ளவர்கள் ஒவ்வொரு வெள்ளியன்றும் வெள்ளீஸ்வரரை வழிபட்டு வந்தால் கண் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். சுக்கிரன் என்பதற்கு தெளிவு, தூய்மை மற்றும் பிரகாசம் என்று பொருள். பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திர நாளில், சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியோடு வாழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நவக்கிரகங்கள் கோயில், சுக்கிர பகவான், நவக்கிரகங்கள், வெள்ளீஸ்வரர், பார்க்கவேஸ்வரர், சுக்ரன், சுக்ர பகவான், சுக்கிராச்சாரியார், கண் குறைபாடு, மாங்காடு, திருவல்லீஸ்வரர், சுக்ர பகவான் கோயில்,