செல்வபுரம் முத்துமாரியம்மன் கோயில்!

93

செல்வபுரம் முத்துமாரியம்மன் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் என்ற பகுதியில் உள்ள கோயில் முத்துமாரியம்மன். இந்தக் கோயிலில் மூலவராக முத்துமாரியம்மன் காட்சி தருகிறாள். உற்சவராக விநாயகர், முருகன், நாகர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தாயார் முத்து மாரியம்மன் அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சியானது 15 நாட்கள் வரையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கோயில் மூலஸ்தானத்தில் அம்மன் சிலை வடிவிலும், சுயம்பு வடிவிலும் அருள் பாலிக்கிறாள்.

கடந்த 1980 ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் சிறுவர்களால் நிறுவப்பட்டது. இயற்கை சூழல் நிறைந்த பேரூர் மெயின் ரோட்டில் வேப்ப மரங்கள் நிறைந்துள்ள பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. கடன் பிரச்சனை தீர்வதற்கு இந்தக் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது.

பக்தர்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், கோயிலுக்கு வேண்டிய உபகரணங்கள் வாங்கி கொடுத்து, பால், நெய் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் கொடுத்தும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். கோயில் மூலஸ்தானத்தில் அம்மன் சிலை வடிவிலும், சுயம்பு வடிவிலும் அருள் பாலிக்கிறாள்.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு, சிறுவர்களால் ஒரு சின்ன செங்கல் வைத்து வழிபடத் தொடங்கினர். அதன் பிறகு ஒரு சிறிய சிலையை வைத்து வழிபட்டனர். பின்னர், 10 ஆண்டுகளில் சிலை உருவம் ஜொலிக்கவே அம்மனின் அருள் குறித்து அனைவருக்கும் தெரியவர 4 பக்கமும் சுவர் எழுப்பி சிறிய கோயிலாக கட்டி வழிபட்டு வருகின்றனர்.