செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரர் கோயில் வழிபாடு!

172

செவ்வாய் தோஷம் நீங்க வைத்தீஸ்வரர் கோயில் வழிபாடு!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் யாவுமே கிரக நிலைகளின் அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது. ஒன்பது கிரகங்கள் நவக்கிரகங்கள் என்றழைக்கப்படுகிறது.

9 கிரகங்கள் (நவக்கிரகங்கள்):

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. செவ்வாய்
  4. புதன்
  5. குரு
  6. சுக்கிரன்
  7. சனி
  8. ராகு
  9. கேது

இதில், ஒரு சில மட்டுமே உண்மையான கோள்கள். ராகு மற்றும் கேது ஆகியவை நிழற் கோள்கள். அதாவது இல்லாத கிரகங்கள். சூரியன் ஒரு விண்மீண். சந்திரன் பூமியின் துணைக்கோள். பொதுவாக நாம் அனுபவிக்க க் கூடிய இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்து கொள்கிறோம். அதுவும், நவக்கிரகங்களுக்கு தான் நாம் பரிகாரம் செய்கிறோம். உதாரணமாக, நீதிமானான சனி பகவானுக்கு நவக்கிரகத்திற்கு தான் அர்ச்சனை செய்து, வழிபாடு செய்கிறோம். ஆனால், சனி பகவானுக்குரிய கோயில்கள் என்னவோ திருநள்ளாறு மற்றும் குச்சனூர் தான்.

நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்களாக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தாலும் நவக்கிரகங்களுக்கு தான் நாம், அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். சரி, தமிழகத்தில் இருக்கக்கூடிய நவக்கிரக கோயில்கள் பற்றி இந்தப் பதிவில் ஒவ்வொன்றாக காண்போம்….

சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில் உள்ளது வைத்தீஸ்வரன் கோயில். இந்த கோயிலில் செவ்வாய் பகவான் பரிகார தலமாக விளங்குகிறது. கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் சோழர்களால் கட்டப்பட்டுள்ளது. தேவர்களுக்கு அதிபதியான இந்திரன் மற்றும் செவ்வாய் பகவான் ஆகியோர் இந்த கோயிலில் உள்ள வைத்தீஸ்வரரை வணங்கி தங்கள்து குறைகள் நீங்க பெற்றிருக்கின்றனர்.

இந்த கோயிலின் மூலவர் வைத்தியநாத சுவாமி உடனுறை தையல் நாயகி அம்மன். செவ்வாய் கிரகத்தின் அதிபதி அங்காரகன். இந்தக் கோயிலில் உள்ள அங்காரகன் மற்றும் விஷ்ணு துர்க்கை அம்மனை ஒவ்வொரு செவ்வாய்கிழமையிலும் ராகுகால நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்து வழிபட வேண்டும். அப்படி செய்வதன் மூலம் செவ்வாய் தோஷம் நீங்குவதோடு, தீராத நோய்கள், தோல் நோய்கள் ஆகியவை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.