திருவல்லிக்கேணி அங்காள பரமேஸ்வரி கோயில்!

97

திருவல்லிக்கேணி அங்காள பரமேஸ்வரி கோயில்!

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி என்ற ஊரில் உள்ளது அங்காள பரமேஸ்வரி கோயில். இந்தக் கோயிலில் அங்காள பரமேஸ்வரி மூலவராக காட்சி தருகிறாள். இந்தக் கோயிலில் மயானக் கொள்ளை விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

தல சிறப்பு:

நோயிலிருந்து குணம் பெற கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து அதனை சூறை விட்டு வேண்டிக் கொண்டால் நோய் குணமாகும் என்பது ஐதீகம். திண்டிவனம் அருகிலுள்ள மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்கு சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்குமோ அந்தப் பலன்கள் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் கிடைக்கும்.

வேண்டுதல்:

ஆசைப்பட்ட வாழ்க்கை அமையவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், குழந்தைச் செல்வம் பெறவும், நோயிலிருந்து குணம் பெறவும், கடன் பிரச்சனை தீரவும், எதிரிகள் தொல்லை நீங்கவும், கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல் தீரவும் இந்தக் கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

நிவர்த்திக்கடன்:

தங்களது வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் இந்தக் கோயிலில் உள்ள அம்மனுக்கு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 7 அல்லது 9 வாரங்கள் வந்து செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சாற்றியும், கொழுக்கட்டையில் அம்மன் உருவம் பிடித்தும் தங்களது நிவர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

தல பெருமை:

பெண்கள், செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தொடர்ந்து 7 அல்லது 9 வாரங்கள் வந்து செவ்வரளி மாலை அல்லது எலுமிச்சை மாலை சாற்றி வேண்டிக் கொண்டால் ஆசைப்பட்ட வாழ்க்கை அமையும், தாலி பாக்கியமும் நிலைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ந்து 7 அல்லது 9 வெள்ளிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்கு வந்து அம்மனை பிரார்த்தனை செய்தால் குழந்தைப் பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள். நோயிலிருந்து குணம் பெற கொழுக்கட்டையில் அம்மனின் உருவம் பிடித்து அதனை சூறை விட்டு வேண்டிக் கொண்டால் நோய் குணமாகும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஓலைக் குடிசையில் அம்மனை வைத்து வழிபட தொடங்கினர். பிற்காலத்தில் அந்த ஓலைக் குடிசையானது அழகிய பிரமாண்ட கட்டடமாக வளர்ந்திருக்கிறது.