திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு!

206

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் வரலாறு!

ரிக், யஜூர், சாம, அதர்வண ஆகிய 4 வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு என்று பெயர் பெற்றது. அகத்திய முனிவருக்கு, சிவபெருமான் திருமணம் கோலத்தில் காட்சி தந்த தலம் இது என்பது ஐதீகம். இந்த கோயிலில் சிவபெருமான் மனித உருவில் திருமணக் காட்சி தருகிறார்.

திருவேற்காடு பாலாம்பிகையையும், திருவலிதாயம் ஜகதாம்பிகையையும் திருவொற்றியூர் வடிவுடையாம்பிகையையும் ஒரே நாளில் வழிபட்டால் இம்பையிலும், மறுமையிலும் அனைத்து நன்மைகளையும் பெறலாம். அதோடு, இந்த தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் தொடர்பான நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.

திருவேற்காட்டில் இருக்கும் வேதபுரீஸ்வரர் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை மனதார ஒரு முறையாவது நினைத்தாலோ, இந்த கோயில் வழியாக சென்றாலோ அல்லது இந்த கோயிலில் தங்கியிருந்தாலோ முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தல வரலாறு:

சிவபெருமான், பார்வதி தேவியை திருமணம் செய்த போது, தேவர்கள் இமயமலை எல்லையை அடைந்த தால் வட திசை தாழ்ந்தும், தென் திசை உயர்ந்தும் காணப்பட்டது. இதனை சரி செய்யவே, சிவபெருமான் அகத்திய முனிவரை தென் திசை நோக்கி அனுப்பி வைத்தார். ஆனால், அகத்திய முனிவர் சிவபெருமான், பார்வதி திருமண கோலத்தை பார்க்க முடியவில்லை என்பதால், தென் திசை நோக்கி செல்லும் போது திருமண கோலத்தில் காட்சி தருவதாக சிவபெருமான், அகத்தியருக்கு கூறினார்.

அகத்திய முனிவர், திருவேற்காடு சென்ற போது சிவபெருமான் பார்வதி உடனான திருமணக் கோலத்தில் காட்சி புரிந்தார். அதன் பிறகு முனிவரின் சாபத்தால் பெருமாள் ஜமத்கனி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாக அவதரித்து பரசுராமர் என்று பெயர் பெற்றார். பரசுராமர் திருவேற்காடு வேதபுரீஸ்வரரை வழிபட வந்த போது அவருடன் ரேணுகையும் வந்தார்.

ரேணுகை, கருமாரியம்மன் கோயில் என்ற பெயரில் விளங்குகிறது. பிரளய காலத்தில் இந்த உலகம் மூடப்பட்ட பின், இந்த உலகை மீண்டும் படைக்க சிவபெருமான் விரும்பினார். அதற்காக முதலில் வெள்ளத்தை வற்றச் செய்தார். அதன் பிறகு ரிக், யஜூர், சாம, அதர்வன என்ற 4 வேதங்களை இந்த கோயிலில் வேல மரங்களாய் அதாவது வெள்ளெருக்கு மரங்களாக வடிவெடுக்குமாறு கட்டளையிட்டார்.

அதன்படி, இந்த கோயிலில் 4 வேதங்களும், வெள்வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டு வந்தன. இதனால், இந்த கோயில் தலம் திருவேற்காடு என்று அழைக்கப்படுகிறது. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள் பாலிக்கிறார். லிங்கத்தின் பின்புறம் சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி புரிகின்றனர். திருமணமாகாத ஆண், பெண் இந்த கோயிலுக்கு வந்து திருமண கோலத்தில் இருக்கும் சிவன் பார்வதி தேவியை வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.

மேலும், இந்த தலத்து வேத தீர்த்தத்தில் ஞாயிறு தோறும் நீராடி வந்தால் தோல் தொடர்பான நோய்கள் தீரும் என்பது ஐதீகம்.