தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில்!

61

தேக்கம்பட்டி வனபத்ரகாளியம்மன் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள வனபத்ரகாளியம்மன் கோயில். இந்தக் கோயிலில் வனபத்ரகாளியம்மன் மூலவராக காட்சி தருகிறார். இந்தக் கோயில் அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறாள். குண்டம் இறங்குதல் என்ற தீமிதி நிவர்த்திக்கடன் இந்தக் கோயிலின் சிறப்பம்சமாகும்.

செய்வினை, பில்லிசூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையேனும் சென்று வழிபட்டு வந்தால் இந்த செய்வினை, பில்லி சூனியக் கோளாறு நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் கிடைக்க தொரத்தி மரத்தில் கல்லை கட்டி விட்டு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலில் அம்மனுக்கு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை நிவர்த்திக்கடனாக பக்தர்கள் வழங்குகின்றனர். இது தவிர, கிடா வெட்டுதல், ஆடு வெட்டுதல் ஆகியவையும் இந்தக் கோயிலில் சிறப்பாக நடைபெறுகிறது. வனபத்திரகாளியம்மன் என்றாலே கிடா வெட்டுதல் தான் சிறப்பான ஒரு நிகழ்ச்சி. ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் ஆடு, கிடா பலியிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தக் கோயிலில் வாரத்திற்கு 200 முதல் 400 வரையிலான கிடா வெட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிடா வெட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.

தல பெருமை:

வேண்டிய காரியம் நிறைவேறியதும், பெண்கள் தங்களது தாலியை கழற்றி உண்டியலில் போட்டு விடுவர். குழந்தை பாக்கியம் கிடைக்க தொரத்தி மரத்தில் கல்லை கட்டி விட்டு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம்.

பூ போடுதல்:

எந்த ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்னதாகவும், திருமணம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னதாகவும் சுவாமி முன்பு பூ போட்டு கேட்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வெள்ளை மற்றும் சிவப்பு நிற பூக்களை தனித்தனியாக ஒரு சிறிய இலையில் கட்டி அதனை அம்பாள் காலடியில் வைத்து விட்டு எடுக்கும் போது நாம் நினைத்த பூ வந்திருந்தால் அம்பாளின் உத்தரவு கிடைத்துவிட்டது என்பது ஐதீகம். அப்படியில்லை என்றால் அம்பாளின் உத்தரவு கிடைக்கவில்லை என்பது அர்த்தம்.

கிடா வெட்டும் வழிபாடு:

வனம் என்றாலே காடு என்று பொருள். அப்படியிருக்கும் போது கிடா வெட்டுதல் என்பது ஒரு சர்வ சாதாரணமாக விஷயம் தானே. ஆனால், வனபத்ரகாளியம்மன் என்றாலே கிடா வெட்டி வழிபாடு செய்தல் ஆகும். ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் ஆடு, கிடா பலியிடுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்தக் கோயிலில் வாரத்திற்கு 200 முதல் 400 வரையிலான கிடா வெட்டப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிடா வெட்டப்படுவதாக சொல்லப்படுகிறது.

தல வரலாறு:

இந்தக் கோயில் எந்த காலத்தில் கட்டப்பட்ட து என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு காலகட்டத்தில் கட்டப்பட்டுள்ளது. சாகா வரம் பெற்ற மகிஷாசூரனை அழிப்பதற்கு அம்பாள் சிவபெருமானை நினைத்து தவம் செய்து வரம் பெற்று மகிஷாசூரனை அழித்ததாகவும், சிவனை நினைத்து தியானம் செய்ததால் இத்தல அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றது. ஆரவல்லி சூரவல்லி என்ற கதையோடு இந்தக் கோயில் தொடர்புடையதாக சொல்லப்படுகிறது.

பாண்டவர்களில் ஒருவரான பீமன் மந்திரம், பில்லி, சூனியம் ஆகியவற்றால் ஆட்சி செய்த ஆரவல்லி சூரவல்லி பெண்களை அடக்க சென்று சிறைப்பட்டார். அவரை கிருஷ்ணன் காப்பாற்றினார். அதன் பிறகு அந்த ஆரவல்லி சூரவல்லி பெண்களை அடக்குவதற்கு தங்களது தங்கை மகன் அல்லி முத்துவை அனுப்பி வைத்தனர். அவன் இத்தல இறைவியான வனபத்ரகாளியம்மனை வழிபட்டு சென்று ஆரவல்லி பெண்களின் சாம்ராஜ்ஜியத்தை தவிடுபொடியாக்கினான். இதனால், பயந்து போன ஆரவல்லி பெண்கள், தங்களது தங்கையை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலமாக விஷம் கொடுத்து அல்லு முத்துவை கொன்றனர்.

இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லி முத்துவின் உயிரை மீட்டு நடந்த விஷயங்கள் குறித்து அறிந்து கொண்டு ஆரவல்லி பெண்களை அடக்க புறப்பட்டுச் சென்றான். ஆரவல்லி பெண்களை அடக்க செல்லும் வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவளது அருள் பெற்று ஆரவல்லி சாம்ராஜ்ஜியத்தை அழித்து ஒழித்தான் என்று வரலாற்றில் சொல்லப்படுகிறது.