நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்!

65

நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்!

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள கோயில் அகத்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் அகத்தீஸ்வரர் காட்சி தருகிறார். தாயார் ஆனந்தவல்லி காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் உள்ள சுக்ரவார அம்மனின் பல்லக்கை பெண்கள் தூக்கி வருவது கோயிலின் சிறப்பம்சம். அகத்தீஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனி சன்னதியில் அருள் பாலிக்கின்றனர்.

வேண்டுதல்:

செல்வம், கல்வி, பணி, பதவி, திருமணம் என்று எது வேண்டிக் கொண்டாலும் இந்தக் கோயிலில் நிறைவேறும் என்பது ஐதீகம். சுக்ரவார அம்மனுக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் அணிவித்தும், பல்லக்கை தூக்கியும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

தல பெருமை:

என்னதான் இந்தக் கோயில் சிவன் கோயிலாக இருந்தாலும், இந்தக் கோயிலில் சுக்ரவார அம்மனே மிகவும் பிரசித்து பெற்றது. இந்த அம்மன் பல கோயில்களில் இருந்தாலும் இங்கு மட்டும் தான் அவளுக்கு திருவீதி உலா நடைபெறுகிறது.

தல வரலாறு:

வாமனரால் இழந்த தனது கண்பார்வையை பெற அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், சிவ வழிபாடு செய்தார். அதே நேரத்தில் அம்பிகையும், சிவபெருமானை நினைத்து தவம் செய்து கொண்டிருந்தாள். சுக்ராச்சாரியார் மற்றும் அம்பிகை இருவரும் ஒரே நேரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் செய்த நிலையில், யாருக்கு முதலில் அருள் புரிவது என்று யோசித்த சிவபெருமான், முதலில் சுக்ரனுக்கே ஆசி வழங்கும்படி அம்பிகை விட்டுக் கொடுத்தாள்.

மேலும், தனக்குரிய வெள்ளிக்கிழமையை அம்பிகைக்கு உரியதாக ஏற்க வேண்டும் என்றும், என்னை பூஜிப்பவர்களுக்கு சுக்ரனின் தோஷம் வரக் கூடாது என்றும் தேவி கேட்டுக் கொண்டாள். அதற்கு சுக்ரனும் ஒப்புக் கொண்டார். சுக்ரவாரம் என்றால் வெள்ளிக்கிழமையை குறிக்கும். அன்றைய நாளில் பூஜையை ஏற்பதால் இந்தக் கோயிலில் உள்ள அம்மன் சுக்ரவார அம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.