பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில்!

100

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி என்ற ஊரில் உள்ள கோயில் சுந்தரராஜப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் சுந்தர ராஜப் பெருமாளே மூலவராகவும், உற்சவராகவும் திகழ்கிறார். சுந்தரவல்லி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா, ஆடி பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

வைகை ஆற்றங்கரையில் கோயில் அமைந்திருப்பதும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அருகில் இருப்பதும் சிறப்பு. மதுரையில் நடக்கும் திருக்கல்யாணம், தேரோட்டம், ஆற்றில் கள்ளழகர் இறங்குதல் என திருவிழாக்கள் நடைபெறுவது சிறப்பு ஆகும். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இத்திருவிழாவின் ஒரு பகுதியாக குதிரை வாகனத்தில் எழுந்தருளும் பெருமாள் ஆயிரம் பொன் சப்பரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்த சப்பரத்தில் 4 சக்கரங்கள் முதல் 30 அடி சுற்றளவு 40 அடி உயரம் கொண்ட உச்சி கோபுரம் வரை தனித்தனியாக ஜோடிக்கப்படுகிறது. பக்தர்கள் ஒன்று கூடி இந்த தேரை இரவில் ஆற்றுப்பாலம் முதல் காக்கா தோப்பு வரை 3 கிமீ தூரம் இழுப்பதன் மூலம் பரமக்குடி சித்திரை விழாவிற்கு சிறப்பு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.