பழைய மாங்காடு நாகநாத ஈஸ்வரர் கோயில்!

166

பழைய மாங்காடு நாகநாத ஈஸ்வரர் கோயில்!

வேலூர் மாவட்டம் பழைய மாங்காடு என்ற ஊரில் உள்ள கோயில் நாகநாத ஈஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் நாகநாத ஈஸ்வரர் மூலவராகவும், அவரே உற்சவராகவும் காட்சி தருகிறார். நாகேஸ்வரி தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கோயிலில் நாகலிங்க மரமே தல விருட்சமாக திகழ்கிறது.

மகாசிவராத்திரி, அன்னாபிஷேகம், நவராத்திரி பூஜை, பிரதி பிரதோஷ பூஜை, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜை, தைப்பூசம், குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகிய நாட்கள் கோயிலில் விஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், தோஷ பரிகார நிவர்த்திக்காகவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்தக் கோயிலானது அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ராஜகோபுரம் ஆகியவற்றுடன் சிறப்பாக அமையப் பெற்றுள்ளது. மேலும், இந்தக் கோயிலில் பஞ்ச லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயிலில் அம்பாள் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறாள்.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பல்லவர் காலத்தில் கற்கோயில் அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வந்ததாக அறியப்படுகிறது. கோயிலானது பாலாற்றின் தென்கரையில் இயற்கையான சூழலில் அமையப் பெற்றுள்ளது.