மதுக்கரை மார்க்கெட் பெரிய விநாயகர் கோயில்!

103

மதுக்கரை மார்க்கெட் பெரிய விநாயகர் கோயில்!

கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை மார்க்கெட் என்ற ஊரில் உள்ள கோயில் பெரிய விநாயகர் கோயில். இந்தக் கோயிலில் பெரிய விநாயகர் மூலவராகவும், விநாயகர் உற்சவராகவும் காட்சி தருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசம், கிருத்திகை, பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை மாதம் சிவனுக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றன.

விநாயகர், சிவன், முருகன், அம்மன், நவக்கிரகங்கள் கிழக்கு முகம் பார்த்து அமர்ந்துள்ளனர். உடல் ஆரோக்கியத்திற்காகவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் விநாயகர், சிவனுக்கு அபிஷேகம் செய்தும், பக்தர்களுக்கு அன்னதானம் செய்தும் தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

இந்த ஊரில் நடக்கும் எல்லா விழாக்களுக்கும் கிணற்றிலிருந்து தீர்த்தம் நீர் எடுத்துச் சென்று பூஜை செய்வார்கள். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்துள்ள விநாயகரை வைத்து வழிபட்டு வந்தார்கள். பிறகு 1997 ஆம் ஆண்டு பொதுமக்கள் சேர்ந்து கோயிலை விரிவுபடுத்தி, முருகன், அம்மன், மாணிக்க வாசர் மற்றும் நவகோள் வைத்து கும்பாபிஷேகம் நடந்தது. பிறகு 2010 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்துள்ளது.