ராகு: சர்ப்ப சாந்தி பூஜைக்கு திருநாகேஸ்வரர் வழிபாடு!

279

சர்ப்ப சாந்தி பூஜைக்கு திருநாகேஸ்வரர் வழிபாடு!

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப, துன்பங்கள் யாவுமே 9 கிரக நிலைகளின் அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த ஒன்பது கிரகங்களும் நவக்கிரகங்கள் என்றழைக்கப்படுகிறது.

9 கிரகங்கள் (நவக்கிரகங்கள்):

  1. சூரியன்
  2. சந்திரன்
  3. செவ்வாய்
  4. புதன்
  5. குரு
  6. சுக்கிரன்
  7. சனி
  8. ராகு
  9. கேது

இதில், ஒரு சில மட்டுமே உண்மையான கோள்கள். ராகு மற்றும் கேது ஆகியவை நிழற் கோள்கள். அதாவது இல்லாத கிரகங்கள். சூரியன் ஒரு விண்மீண். சந்திரன் பூமியின் துணைக்கோள். பொதுவாக நாம் அனுபவிக்க க் கூடிய இன்ப, துன்பங்களுக்கு ஏற்ப பரிகாரங்கள் செய்து கொள்கிறோம். அதுவும், நவக்கிரகங்களுக்கு தான் நாம் பரிகாரம் செய்கிறோம். உதாரணமாக, நீதிமானான சனி பகவானுக்கு நவக்கிரகத்திற்கு தான் அர்ச்சனை செய்து, வழிபாடு செய்கிறோம்.

நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்களாக கொண்ட கோயில்கள் தமிழகத்தில் இருந்தாலும் நவக்கிரகங்களுக்கு தான் நாம், அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். சரி, தமிழகத்தில் இருக்கக்கூடிய நவக்கிரக கோயில்கள் பற்றி இந்தப் பதிவில் பார்த்து வருகிறோம். இதற்கு முன்னதாக சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி பகவானுக்குரிய கோயில்கள் பற்றி பார்த்தோம். தற்போது ராகு பகவானுக்குரிய வழிபாட்டு தலம் பற்றி இந்தப் பதிவில் பார்போம்…

திருநாகேஸ்வரர்:

சென்னை, குன்றத்தூரில் உள்ள திருநாகேஸ்வரர் கோயில் தான் ராகு பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகு பகவான் வழிபட்டதனால், இந்த கோயிலுக்கு திருநாகேஸ்வரர் என்று பெயர் வந்தது. ஆனால், அதற்கு முன்னதாக சடையாண்டீஸ்வரர் என்று பெயர் இருந்தது. திருநாகேஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மன்.

ராகு திசை நடப்பவர்கள், ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு புத்தி நடப்பில் இருப்பவர்கள் என்று அனைவரும் இந்த கோயிலில் உள்ள சிவபெருமானையும், காமாட்சி அம்மனையும் வழிபட்டு வர நன்மை உண்டாகும். இதே போன்று, சர்ப்ப தோஷம், சர்ப்ப சாபம் ஆகியவற்றால் திருமணத்தடை, ஆயுள் பாதிப்பு ஏற்படலாம். இவற்றிற்கு பரிகாரமாக ராகு கால வழிபாடு செய்து கொள்வது நல்லது. சர்ப்ப சாந்தி பரிகார ஹோமமும் இந்த கோயிலில் செய்யப்படுகிறது.