விளாச்சேரி ஐயப்பன் கோயில்!

399

விளாச்சேரி ஐயப்பன் கோயில்!

மதுரை மாவட்டம் விளாச்சேரி என்ற ஊரில் உள்ள கோயில் ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் ஐயப்பன் கோயில். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கொடியேற்றப்பட்டு ஜனவரி 1ஆம் தேதி ஆறாட்டு விழா நடத்தப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி, சித்திரை விஷூ, நவராத்திரி விழா, விளக்கு பூஜையும், தமிழ் மாத முதல் சனிக்கிழமையில் நெய் அபிஷேகமும் செய்யப்படுகிறது.

பார்வதி தேவி மேற்கு நோக்கியும், கணபதி கிழக்கு நோக்கியும் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மேலும், சிவன், குருவாயூரப்பன், சுப்பிரமணியர் சன்னதிகளும் உள்ளன. கல்வியில் சிறந்து விளங்கவும், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.

பங்குனி உத்திர நாளில் ஐயப்பனின் அவதாரம் நிகழ்ந்தது. சபரிமலையில் வீற்றியிருக்கும் ஐயப்பன், இந்தக் கோயிலுக்கு வர முடியாத தனது பக்தர்களுக்காக பல இடங்களில் காட்சி தருகிறார். அதில், ஒன்று தான் மதுரை விளாச்சேரி ஐயப்பன் கோயில். இந்தக் கோயிலில் தினமும் அஷ்டதிரவிய மகாகணபதி ஹோமம் நடக்கிறது.

அமிர்தம் வேண்டி தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அமிர்தத்தை அசுரர்கள் குடித்தால் இந்த உலகத்தில் எங்கும் அநியாயம், நிரந்தமாகிவிடும் என்பதற்காக திருமால், நல்லவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மோகினி வடிவம் எடுத்தார். இந்த வடிவத்துடன் உலகத்தின் நன்மைக்காக சிவபெருமானும் இணைந்தார். அப்போது சிவ, விஷ்ணுவின் ஆற்றல்கள் இணைந்த தர்மசாஸ்தா அவதரித்தார்.

அவரது மானிட அவதாரமான ஐயப்பன் இந்த பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரம் பங்குனி உத்திர நாளில் சனிக்கிழமையில் தான் நிகழ்ந்தது. தேவலோகத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்ட ஒரு குழந்தை காட்டில் கிடந்தது. அந்த குழந்தையின் கழுத்தில் மணி கட்டப்பட்டிருந்தது. பந்தளமன்னர் ராஜசேகர் அந்த குழந்தையை எடுத்து தனது சொந்த மகனைப் போன்று வளர்த்து வந்தான். மேலும், அந்த குழந்தைக்கு மணிகண்டன் என்றும் பெயரிட்டான். அதன் பிறகு ராஜசேகர மன்னரின் பட்டத்தரசி ராஜராஜன் என்ற மகனைப் பெற்றாள்.

தனக்கு என்று மகன் இருந்தும் முதல் மகனான மணிகண்டனுக்கு பட்டம் சூட்ட மன்னர் நினைத்தார். இது அமைச்சர் ஒருவருக்கு பிடிக்கவில்லை. மகாராணியிடம் ராஜராஜனுக்கு முடி சூட்டும்படி கூறினார். புலிப்பாலால் தனது தலைவலி போகும் என்று மருத்துவர் மூலமாக மணிகண்டனிடம் கூற செய்தாள். அதன்படி, புலிப்பாலுக்காக மணிகண்டன் காட்டிற்கு சென்றான். அவர் தர்ம சாஸ்தா என்பதை முனிவர்கள் உணர்ந்து கொண்டனர். இதையடுத்து, மணிகண்டனை பொன்னம்பலத்திற்கு அழைத்துச் சென்று ரத்தின சிம்மாசனம் அமைத்துக் கொடுத்து பூஜித்தனர்.

இந்த இடம் தான் தற்போது ஐயப்பன் ஜோதியாக காட்சி தரும் பொன்னம்பல மேடாக விளங்குகிறது. அதன் பிறகு புலிகளுடன் மணிகண்டன் நாடு திரும்பினான். அவனிடம் எதிரிகள் அனைவரும் மன்னிப்பு கேட்டனர். அப்போது, தான் ஒரு தெய்வப்பிறகு என்றும், தனக்கு 12 வயது முடிந்து விட்டதையும் மணிகண்டன் மன்னருக்கு உணர்த்தினான்.

இதையடுத்து, தான் ஒரு அம்பு எய்வதாகவும், அந்த அம்பு எந்த இடத்தில் போய் விழுகிறதோ அந்த இடத்தில் தனக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று பந்தளமன்னருக்கு, மணிகண்டன் அருள்பாலித்தான். அதன்படியே பந்தளமன்ன ராஜசேகரன் கோயில் கட்டினார்.

ஐயப்பன் அவரது காலத்தில் போர்வீரராக மதுரை பாண்டிய மன்னரிடம் பாண்டிச்சேவகம் புரிந்துள்ளார். அதன் நினைவாக மதுரையில் ஐயப்பனுக்கு சபரிமலையில் இருப்பதைப் போன்று விளாச்சேரி அருகில் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலில் அருள் பாலிக்கும் ஐயப்பன் ராஜ தேஜஸ், சின் முத்திரையுடன், யோக பட்டயம் அணிந்தும், வீராசனத்தில் வட மேற்கு திசையில் உள்ள சபரிமலையை பார்த்தபடி அமர்ந்துள்ளார்.