ஸ்ரீனிவாச பெருமாள் நாச்சியார் கோயில் கல் கருடர்!
உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமாகவும், 108 வைணவ திருத்தலங்களில் 20வது தலமாக போற்றப்படுகிறது கும்பகோணம் ஸ்ரீனிவாசப் பெருமாள் நாச்சியார் கோயில்.
தல வரலாறு:
மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற அவருக்கு மகளாக மகாலட்சுமி அவதரித்தார். அவரை மானிட உருவில் வந்து ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் புரிந்து கொண்டார். இங்கு ஸ்ரீனிவாசப் பெருமாளும், வஞ்சுளவல்லி தாயாரும் தம்பதி சமேதராய் திருமண கோலத்தில் நின்ற நிலையில் அருள் பாலிக்கின்றனர். அதனால் தாயாருக்கு என தனி சன்னதி இல்லை.
அதிசய கருடர்:
இந்த கோயிலில் ஒரே கல்லால் ஆன மிகப் பெரிய கல் கருட பகவானுக்கு தனி சன்னை அமைக்கந்துள்ளது. நாள் தோறும் 6 கால பூஜை நடைப்பெறுகிறது. பங்குனி மற்றும் மார்கழி மாதம் என இரு முறை மட்டும் வெளியே வரும் இந்த கல் கரு ட பகவான் சன்னதியிலிருந்து வெளியே வரும் போது வெறும் 4 பேர் மட்டும் சுமப்பார்கள்.
அதை தொடர்ந்து 8, 16, 32, 64, 128 பேர் என கருட பகவானின் எடை அதிகரித்துக் கொண்டே போகும். அதே போல் மீண்டும் சன்னதியை சென்றடையும் போது கருடரை தூக்குவோரின் எண்ணிக்கை 128, 64, 32, 16, 8, என குறைந்தௌ சன்னதியை அடையும் போது 4 பேர் தூக்கி செல்வார்கள். இந்த கல் கருட பகவானை 7 வியாழக் கிழமை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.
பங்குனி திருவிழா:
இந்த கோயிலில் பங்குனி தேர் திருவிழாவையொட்டி கொடியேற்றம் துவங்கி நாள் தோறும் யாளி, கிளி, சூரிய பிரபை, சேஷ, அன்ன பட்சி, கமலம், அனுமான், யானை, குதிரை என பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா வருவார். கடைசியாக திருத் தேரோட்டமும், தீர்த்தவாரியும் சப்தாவர்ணத்துடன் பங்குனி தேர்திருவிழா நிறைவு அடையும்.
பெருமானின் பாசுரம்:
கருடன் திருமாலின் இரண்டு திருவடிகளையும் தம் இரு கரங்களால் தாங்கி ஊர்வலமாக வரும் காட்சியே கருட சேவை எனப்படும். அப்போது பெருமான், கருடன் ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே கிடப்பதை பக்தர்கள் புனிதமாகக் கருதுகிறார்கள். பெரியாழ்வார் கண்ட கருட சேவைவேண்டிய வேதங்கள் ஓதி பாண்டியன் அவையில் சந்தேகம் தீர்த்த பெரியாழ்வாருக்கு, பகவான் கருட வாகனனாய்க் காட்சியளித்தான்.
அந்த கருட சேவை காட்சியின் மாட்சியில்தான், பெரியாழ்வார்,”எம்பெருமானே! கருடனின் மீது ஆரோகணித்து வந்து, எனக்குக் காட்சி தந்த, உன் கருணையே கருணை! என்னை நீ காப்பாற்ற முடிவெடுத்த பிறகு, என்னுடைய பிறவித் துன்பம் நீங்கி விட்டது.”
“பறவை ஏறும் பரம புருடா நீ என்னை கைக்கொண்டபின் பிறவி என்னும் கடலும் வற்றி பெரும் பதம் ஆகின்றது” என்று பாசுரம் இடுகிறார் .தன் பிரேம பாவனையால், கருடனை விழிப்போடு பெருமாள் பள்ளியறையை பார்த்து கொள்ளச் சொல்கிறார். இன்றளவும் திருக்கோயில்களிலும் திருமாளிகைகளிலும் இரவு நடை சாற்றும் போது இந்தப் பாசுரம் ஓதப்படுகிறது.
கருடனின் பெயர்கள்:
கருடனுக்கு கருத்மான், சாபர்ணன், பந்தகாசனன், பதகேந்திரன், பகிராஜன், தார்ச்டயன், மோதகாமோதர், மல்லீபுஷ்யபிரியர், மங்களாலயர், சோமகாரீ, பெரிய திருவடி, விஜயன், கிருஷ்ணன், ஜயகருடன், புள்ளரசு, கலுழன், சுவணன்கிரி என்றும் ஓடும்புள் கொற்றப்புள் என்றும் பெயர்கள் உண்டு.