300 அடி நீள மலை, மார்பளவு தண்ணீரில் ஜரனி நரசிம்மர்!

143

300 அடி நீள மலை, மார்பளவு தண்ணீரில் ஜரனி நரசிம்மர்!

கிட்டத்தட்ட 300 அடி நீளமுள்ள மலைக் குகையில் மார்பளவு தண்ணீரில் உள்ள கோயில் தான் ஜரனி (ஜர்னி) நரசிம்மர் கோயில்.

ஒவ்வொரு கோயிலும் ஏதாவது ஒரு அற்புதம், விசித்திரம் இருக்கும். அதனடிப்படையில் தான் அந்த கோயில் புகழ் பெறும். இது கோயில்களுக்கு பக்தர்கள் விரும்பு செல்வார்கள். இது தவிர தங்களது பிரார்த்தனையை நிறைவேற்றம், பிரச்சனைக்கு பரிகாரங்கள் செய்து கொள்ளவும் அதற்குரிய கோயில்களுக்கு சென்று மக்கள் வழிபட்டு வருவார்கள். பொதுவாக முருகன் கோயில்கள் தான் மலை மீது அமைந்திருக்கும். ஆனால், அதையும் தாண்டி ஒரு விசித்திரமான கோயில் ஒன்று இருக்கிறது என்றால், அது நரசிம்மர் கோயில் தான்.

கர்நாடகா மாநிலம் பீதர் அருகிலுள்ள மணிச்சூழா மலைத்தொடரின் கீழ் அமைந்துள்ளது இந்த ஜரனி நரசிம்மர் குகைக் கோயில். பல நூறு ஆண்டுகளாக இங்கு குடிகொண்டுள்ள நரசிம்மரை காண்பது அவ்வளவு எளிதல்ல. கிட்டத்தட்ட 300 அடி நீளமுள்ள மலைக் குகையில் மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால் தான் ஜரனி நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். எப்போதும், தண்ணீர் ஊற்றெடுத்து வந்து கொண்டே இருக்கிறது. இந்த தண்ணீரில் சல்பர் நிரம்பியிருப்பதால், மக்கள் இந்த மார்பளவு தண்ணீரில் நடந்து சென்றால் தோல் பிரச்சனைகள் உள்பட தீராத நோய்களும் தீர்ந்து விடும் என்று நம்புகின்றனர்.

குகைக்குள் சிவ லிங்கமும், நரசிம்மரும் இருக்கின்றனர். இந்த ஜரனி நரசிம்மர் சுயம்புவாக தோன்றினார் என்று பலரும் கூறுகின்றனர். விஷ்ணுவின் நான்காவது அவதாரம் தான் நரசிம்மர் அவதாரம். இரண்யகசிபுவைக் கொன்ற நரசிம்மர், சிவனின் பக்தரான ஜரசாசூரன் (ஜலசூரன்) என்ற பெயரைக் கொண்ட ஒரு அசுரனைக் கொன்றதாக வரலாறு சொல்லப்படுகிறது.

தனது உயிரானது பிரியும் நேரத்தில் ஜரசாசூரன் நரசிம்மரிடம் வந்து தான் வசித்த இந்த குகைக்குள் தாங்கள் வந்து பக்தர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அதன்படியே நரசிம்மர் குகைக்குள் வந்தார். அதன் பின், ஜரசாசூரன் நீராக மாறி நரசிம்மரின் காலில் ஓட ஆரம்பித்து அவன் புண்ணியம் பெற்றான் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே குகைக்குள் நீர் ஓட ஆரம்பித்துள்ளது. கோடைக் காலத்திலும் நீர் வற்றாமல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த குகை கோயிலுக்கு வந்து ஜரனி நரசிம்மரை வழிபட்டு வந்தால், திருமணமான தம்பதிகளுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.