6 அடி உயரத்தில் காட்சி தரும் பிள்ளையார்பட்டி விநாயகர்!

438

6 அடி உயரத்தில் காட்சி தரும் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்!

மலையை குடைந்து கட்டப்பட்டுள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் 6 அடி உயரத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சன்னதியை யாரும் வலம் வர முடியாது.

சிவகங்கை மாவட்டத்தில் பிள்ளையார்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது கற்பக விநாயகர் திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் குன்றுகளைக் குடைந்து இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கோயிலின் முதன்மை தெய்வமாக கற்பக விநாயகர் காட்சியளிக்கிறார். அதுவும் வடக்கு பக்கமாக பார்த்துக் கொண்டு 6 அடி உயரத்திலிர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். விநாயகரின் சிலையானது, ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்ற சிற்பியால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறுகின்றது.

இந்த கோயிலைப் பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்: ஆயக்காரன்புலம் ஸ்ரீ கலிதீர்த்த அய்யனார் கோயில்!

மலையைக் குடைந்து இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளதால், கற்பக விநாயகரின் சன்னதியை யாராலும் சுற்றி வர இயலாது. பல பெயர்களைக் கொண்டுள்ள விநாயகர் இடத்திற்கு தகுந்தவாறு பல பல காரணங்களால் சிறப்பு பெயர்கள் பெற்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

மேலும் படிக்க: குச்சுப்புல்லினால் அமைத்த கூரை குச்சனூர் சனீஸ்வரன் கோயில்!

விநாயகர் பெற்றுள்ள பெயர்கள்:

கணபதி, விநாயகன், பிள்ளையார், விக்கின விநாயகன், மூத்த திருப்பிள்ளையார், கணேசன், யானைமுகன், கற்பக மூர்த்தி, கற்பக விநாயகர், விக்னேஸ்வரன், அத்தி முகன், கற்பக பிள்ளையார், கணநாதன், ஓங்காரன், கரிமுகன், கஜமுகன், தும்பிக்கையன், ஐங்கரன் என்று பல பெயர்களைக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் சிறப்புகள்:

  1. கற்பக விநாயகரின் துதிக்கையானது வலம் சுழித்ததாக அமைந்துள்ளது.
  2. விநாயகரின் மற்ற கோயில்களில் இருப்பதைப் போன்று 4 கைகள் இல்லாமல் பிள்ளையார்பட்டியில் 2 கைகளைக் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
  3. வயிறானது ஆசனத்தில் படியாமல் அர்த்தபத்ம ஆசனம் போன்று கால்களை மடித்து அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
  4. வலத்தந்தம் நீண்டும், இடது பக்க தந்தம் குறுகியும் காணப்படுகிறது.
  5. வலக்கரத்தில் கொழுக்கட்டை வைத்திருப்பது போன்று காட்சி தருகிறார்.

இதையும் தெரிந்து கொள்ளுங்கள்:நரசிம்மரை வணங்கியவாறு காட்சியளிக்கும் ஆஞ்சநேயர்!

ஒவ்வொரு சதுர்த்தியின் போதும் பிள்ளையார்பட்டியில், இரவு நேரத்தில் கற்பக விநாயகர் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தில் வலம் வருகிறார். அதன்படி, இன்று ஜூலை 27, ஆடி 11 ஆம் தேதி செவ்வாய் கிழமை சங்கடஹர சதுர்த்தி. இன்றைய நாளில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் கொண்டாடப்படுகிறது.

10 நாள் திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவானது 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. முதல் நாளில் கோயில் கொடியேற்றம். இதையடுத்து, காப்பு கட்டுதல், விழாவுக்கான ஒவ்வொரு நிகழ்வுகளும் நடைபெறும். 2ஆம் நாளிலிருந்து 8ஆம் நாள் வரை கற்பக விநாயகர் பல்வேறு விதமான வாகனங்களில் வலம் வருவார். அதில் ஒன்று தான் மூஷிக வாகனம். 9ஆம் நாள் தேர்த்திருவிழா. 10ஆம் நாள் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும்.

விநாயகர் சதுர்த்தி தவிர தமிழ் மற்றும் ஆங்கில புத்தாண்டு தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.