சுவாமி மலை

258

இது நான்காவது படை வீடு ஆகும். இங்கு முருகன் நின்ற கோலத்தில் அருளுகிறார். இவர் சிவனுக்கே ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருளை உரைத்தால் இங்கு மூலவர் குருவாக அருளுகிறார். மூலவர் இங்கு சுவாமிநாத சுவாமி என அழைக்கப்படுகிறார். அருணகிரியாரும், நக்கீரரும் பாடி உள்ளனர். இங்கு தமிழில் உள்ள 60 ஆண்டுகளை விளக்கும் விதமாக 60 படிகள் உள்ளது. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் மலை மீது இருப்பது சிறப்பு ஆகும். இங்கு ஐயப்பன் கோவில் போல தமிழ் வருடபிறப்பில் படி பூஜை செய்யப்படுகிறது.

 

ஆறுபடை வீடுகளில் இங்கு தான் முருகன் உயராமாக உள்ளார். சுவாமிநாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும், அதன்மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமிநாத மூர்த்தி பாண லிங்கமாகவும் காட்சி தருவது சிறப்பு ஆகும். முதல் 3 படை வீடுகளில் சிவபெருமான் தனியாக எழுந்தருளுகின்றார்.

 

ஆனால் இங்கு முருகனே சிவபெருமான் வடிவில் அருளுவது சிறப்பு ஆகும். இங்கு மூலவருக்கு வாகனமாக யானை உள்ளது. இங்குள்ள முருகனுக்கு அலங்காரம் சிறப்பு பெற்றது. விபூதி அபிஷேகத்தின் போது பழுத்த ஞானியாக காட்சி தருகிறார். பழனி போலவே இங்கும் முருகன் மட்டும் தனித்து உள்ளார். இங்கு ஸ்தல விருக்ஷம் நெல்லி ஆகும்.