திருநள்ளாறு சனி பரிகார ஸ்தலம் அல்ல

413

பெரும்பாலோனோர் திருநள்ளாறு திருத்தலத்தை சனியின் பரிகாரத் தலமாக கருதுகின்றனர்.

அவ்வாலயம் சனியது ஆலயமோ சனிக்கு ப்ரீதியான இடமோ அல்ல.

அவ்வாலயம் அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிக்கும் தளமாகும்.

வருத்ததிற்கு உரிய விஷயம் என்னவென்றால் சுவற்றில் குடையப்பட்டிருக்கும் சனியை பார்க்க முந்தியடித்து செல்லும் மக்கள் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை தரிசிப்பதில்லை.

தல வரலாறு:
நள தமயந்தியை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.
நளமகாராஜாவுக்கு 7 1/2 சனி பிடித்தது. அவரது ராஜ்யம், மனைவி தமயந்தி மக்கள் அனைவரையும் இழந்தார். எனினும் சனியானவர் நள மகாராஜாவை விடாமல் துரத்தினாராம்.

அப்பொழுது நளமகாராஜா திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயம் சென்று ஈசனை ஆலிங்கனம் செய்து கொண்டார். உடனே ஈசன் அங்கு தோன்றி, சனியை ஆலயத்தின் உள்ளே வராதே என்று சொல்ல சனியும் ஆலய வெளியிலேயே நின்றுவிட்டார்.

அத்துடன் திருநள்ளாறு வந்து என்னை அதாவது, ஸ்ரீ தர்பாரனண்யேஸ்வரரை தரிசத்து செல்பவரை சனி பிடிக்கக்கூடாது என்று கட்டளை இட்டார்.

ஆக திருநள்ளாறு திருத்தலத்தில் தரிசிக்கப்பட வேண்டிய மூர்த்தி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரே தவிர சனி அல்ல.

ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றாலே சனி பீடை தானே விலகிவிடும்.

ஆக இதைப்படிக்கும் அன்பர்கள் திருநள்ளாறு சென்றால் சனிக்கு மட்டும் முக்கியத்துவம் தராமல் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரரை கட்டாயம் தரிசியுங்கள்.

தல விருட்சம்:

திருனள்ளாறு அருள்மிகு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் தல விருக்ஷமாக இருப்பது தர்பைப்புல் தாவரம்.

இதுவே அவ்வாலயம் சனி பரிகார ஸ்தலம் அல்ல என்பதை நிரூபிக்கும். ஏனெனில் சனியது அபிமான தாவரம் வன்னி எனப்படும் மரமே தவிர தர்பைப்புல் அல்ல….
சிவ சிவ….