தொலைந்த பொருளையும் தொலைந்தவர்களையும் மீட்டுத்தரும் திருவழுந்தூர் பெருமான்

178

திருவழுந்தூர் பெருமான்

திருவழுந்தூர் என்னும் இந்த புண்ணிய ஸ்தலம், மாயவரம்- குத்தாலம் கோமல் செல்லும் வழியில் 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஸ்தலத்திற்கு அழுந்தூர், கிருஷ்ணாரண்யம் என மற்ற பெயர்களும் உண்டு.பொதுவாக அனைத்து கோயிலிலும் இரண்டு கைகளுடன் காட்சி அளிக்கும் கிருஷ்ண பெருமான் இந்தக் கோயிலில் மட்டும் ருக்மணி,பாமாவுடன் பசுக்கன்றோடு, நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார்.

இக்கோயில் காவிரிக் கரையின் ஓரத்தில் மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்துடன், தேவாதிராஜன் என்கிற மூலவருடன், உற்சவர் ஆமருவியப்பன், தாயார் செங்கமவல்லி, போன்ற கடவுள்களைக் கொண்டுள்ளது.

இந்த தீர்த்தம் தரிசன புஷ்கரணி. இதன் விமானம் கருட விமானம். பஞ்ச கிருஷ்ண க்ஷேக்தரத்தில் இதுவும் ஒன்று. இத்தலத்தின் கீழ் தான் அகத்திய முனிவர் அமர்ந்து தவம் புரிந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது ஊர்ந்து வரதன் என்னும் அரசன் வான்வெளியில் தேரைச் செலுத்தினான்.தன் தவத்தின் பலத்தால் அகத்தியர் தேரை மேலே செல்லாமல் அழுத்தினார். வானிலிருந்த தேர் அகத்தியர் அழுத்தியதால் கீழே விழுந்து மண்ணில் அழுந்தியது.

ஆகவே, இந்த ஸ்தலம் தேரழுந்தூர் என்ற பெயர் பெற்றது.ஒரு முறை கண்ணபிரான் ஆசையோடு பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தான்.அப்பொழுது நான்முகனான பிரம்மன் அந்தப் பசுக்களை அவனுக்குத் தெரியாமல் இங்கே ஒளித்து வைத்து விட்டான்.

இதை அறிந்த கண்ணன் கோபம் கொண்டு தன் சக்தியால் நிறையப் பசுக்களை படைத்து விட்டான். பிரம்ம தேவனோ வியப்புற்று,கதிகலங்கி கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டான். அது மட்டும் அல்லாது கிருஷ்ணனே இங்கு நிரந்தரமாக ஆட்கொள்ளவேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

பகவான் கிருஷ்ணன் ஆமருவியப்பன் என்ற பெயரைக் கொண்டு இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் இந்த ஸ்தலத்தை திருமங்கையாழ்வார் மற்றும் மணவாள மாமுனிவர் போற்றி பாடியுள்ளார்.

 

பரிகாரம்: தொலைந்து போன பொருட்கள் மீண்டும் கிடைக்க, காணாமல்  போன ஒருவர் வீட்டிற்கு திரும்ப, மற்றவர்களால் நம் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள், துன்பங்கள் தீர இங்கு வந்து இத தேவாதிராஜப் பெருமானை மனதார வேண்டிக் கொண்டால் உங்கள் துன்பங்கள் மற்றும் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷமாக வாழ முடியும்.

 

இருப்பிடம்:  இந்த ஸ்தலம் மாயவரம்- குத்தாலம், கோமல் செல்லும் வழியில் சுமார் 21கி.மீ. தூரத்தில் திருவழுந்தூர் எனும் ஊரில் உள்ளது. பஸ் வசதியும், ரயில் வசதியும் உண்டு.

 

தரிசன நேரம்: காலை 6 மணி முதல் நண்பகல் 12 வரை & மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை.