அகத்தியர் உருவாக்கிய சிவாலயங்கள் பகுதி – 2!

97

அகத்தியர் உருவாக்கிய சிவாலயங்கள் பகுதி – 2!

Also Read This: முதல் பகுதி: அகத்தியர் உருவாக்கிய சிவாலங்கள் பகுதி – 1!

முதலில் இந்தப் பகுதியை படித்துவிட்டு வர வேண்டும்….

இரண்டாம் பகுதி 31 முதல் 61 வரை….

 1. அருள்மிகு திரிபுவன நாயகி சமேத அகத்தீஸ்வரர் மூலவர்கள், அருள்மிகு மாகறலீஸ்வரர் (மாகரல் திருமாகரலீஸ்வரர்) திருக்கோவில், மாகறல் (வழி), காஞ்சிபுரம் (உத்திர மேரூர் காஞ்சிபுரம் சாலையில் அமைந்திருக்கின்றது)
 2. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், பஞ்செட்டி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், (வழி: சென்னை டூ கொல்கொத்தா நெடுஞ்சாலையில் 30 கி மீ தொலைவில்) ரெட் ஹில்ஸ்ஸில் இருந்து 21 கி மீ தூரத்தில், சென்னையில் இருந்து புழல் வழியாக 45 கி மீ தொலைவில்; பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது; (பஞ்சேஷ்டி என்றும் கூறுவது உண்டு) (செங்குன்றம் டூ காரனோடை அருகில்)
 3. ஸ்ரீ லோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் ஆலயம், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்.
 4. ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருக்கோவில், திருவொற்றியூர், சென்னை.
 5. அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வில்லிப்பாக்கம் (வில்லிவாக்கம் அல்ல), சென்னை (வழி:சென்னை டூ பாண்டிச்சேரி சாலையில் கடப்பாக்கம் சென்றடைய வேண்டும்; அங்கிருந்து வெண்ணாங்குப்பட்டு செல்ல வேண்டும்; அங்கிருந்து மேற்காகச் செல்லும் குணாம்பேடு சாலையில் 5 கி மீ பயணித்தால் வில்லிப்பாக்கம் வரும்;
 6. அருள்மிகு முத்தாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புத்திரன் கோட்டை, செய்யூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம். (வழி: மதுராந்தகத்தில் இருந்து 25 கி மீ தொலைவில் இருக்கின்றது; மதுராந்தகம் மற்றும் சூணாம்பேட்டையில் இருந்து புத்திரன் கோட்டைக்கு பேருந்து வசதி இருக்கின்றது; புத்திரன் கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி மீ தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கின்றது)
 7. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், சாலவேடு, வந்தவாசி வட்டம், திரு அண்ணாமலை மாவட்டம்.
 8. அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், சோமூர், கரூர் மாவட்டம் (மிகவும் பாழடைந்திருக்கின்றது; வாருங்கள் புனர் நிர்மாணம் செய்வோம்2018)
 9. அருள்மிகு பாடகவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், திருச்சுனை. (வழி: மதுரை டூ திருச்சி சாலையில் 45 கி மீ பயணித்து கருங்காலக்குடி செல்ல வேண்டும்; அங்கிருந்து இடதுபுறம் செல்லும் சாலையில் 2 கி மீ பயணித்தால் கோயிலை அடையலாம்)
 10. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், நெமிலிச்சேரி, சென்னை (வழி:குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து 2 கி மீ)
 11. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், மேலக்காட்டூர், தஞ்சாவூர் மாவட்டம்; (திருப்பனந்தாளில் இருந்து 5 கிமீ)
 12. அருள்மிகு தர்மசம்வர்த்தினி சமேத அகத்தீஸ்வரர், பூந்தோட்டம். (மயிலாடுதுறை டூ பேரளம்)
 13. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பொதட்டூர் பேட்டை, திருத்தணி அருகில், சென்னை;
 14. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், சாம்பவர் வடகரை; திருநெல்வேலி மாவட்டம்;
 15. அருள்மிகு ஆவுடைநாயகி சமேத 1008 அகத்தீஸ்வரர் திருக்கோயில், நஞ்சுண்டாபுரம், தாராபுரம் தாலுகா.
 16. அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில், புரிசை. (செய்யாறு டூ வந்தவாசி சாலையில் தென் கிழக்கே பத்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கின்றது)
 17. அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பழைய பாளையம், துவரங்குறிச்சி அருகில்; (வேறு அருகில் ஊர்கள்: செவல்பட்டி, மேலூர்) திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.1.9.2018
 18. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், பரதூர் (முற்காலத்தில் பரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்திருக்கின்றது) சேத்தியாத்தோப்பு: (சேத்தியாதோப்பு என்ற ஊரிலிருந்து தென்கிழக்கு திசையில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது). கடலூர் மாவட்டம். (திருப்பணிக்கு காத்துக் கொண்டிருக்கின்றது.
 19. அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பென்னலூர், ஸ்ரீ பெரும்புதூர் தாலுகா. (2017 முதல் புனரமைப்பு ஆரம்பம்)
 20. அருள்மிகு புவனேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், வன்னிவேடு, வாலாஜாபேட்டை.
 21. அருள்மிகு சிவகாமிசுந்தரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பெருங்குடி. திருச்சி அருகில்
 22. அருள்மிகு ப்ரத்யங்கரதேவி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், பாதூர், உளுந்தூர்ப்பேட்டை.
 23. அருள்மிகு வடிவுடைநாயகி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், மணப்பாறை (ஆண்டார்கோவில் பேருந்து நிறுத்தம் அருகில்), திருச்சி மாவட்டம்.
 24. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில், சிறுமலை, திண்டுக்கல் மாவட்டம். (வழி: திண்டுக்கல் டூ நத்தம் சாலை)
 25. அருள்மிகு அங்கயற்கண்ணி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில், புதுப்பாளையம் கிராமம், வெம்பாக்கம், திரு அண்ணாமலை மாவட்டம்.
 26. அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வரர் ஆலயம், திருப்பதி நகர், வடசேரி, நாகர்கோவில்.
 27. அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வரர் திருக்கோவில், பெருங்குடி டூ வயலூர் சாலை, மல்லையம்பட்டு, ஸ்ரீரங்கம் தாலுகா, திருச்சி மாவட்டம். (கண் பார்வைக்கு உரிய பரிகார ஸ்தலம்)
 28. அருள்மிகு அகத்தீஸ்வரர் ஆலயம், அயத்தூர், வேப்பம்பட்டு, திருவள்ளூர் மாவட்டம்.
 29. அருள்மிகு அகத்தீஸ்வரர் மற்றும் வேள்வீஸ்வரர் திருக்கோவில்,ஆற்காடு சாலை,வளசரவாக்கம்,சென்னை-87.
 30. அருள்மிகு அகத்தியர் கோவில், ஓரத்தூர், மாடம்பாக்கம், நீலாமங்கலம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டம்-603202