அட, உப்பு தண்ணீரில் குளித்தால் இத்தனை நன்மைகளா?

108

அட, உப்பு தண்ணீரில் குளித்தால் இத்தனை நன்மைகளா?

உப்பு என்பது நமது சமையலுக்கு தேவைப்படுகின்ற முக்கியமான பொருள். உப்பு இல்லையென்றால் உணவுவகைகளை வாயில் கூட வைக்க முடியாது. இப்படிப்பட்ட இந்த உப்பு தண்ணீரில் குளிப்பதால் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. இந்த நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சொறி சிரங்கு குணமாகும்:

சிலருக்கு தோலில் சொறி, சிரங்கு போன்ற நோய்கள் இருக்கும். இப்படிப்பட்ட நோய்க்களை உடையவர்கள் தினமும் குளிக்கும்போது வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து குளித்து வர உடலில் உள்ள தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும். மேலும் தோலில் உள்ள கிருமிகள் அழிந்து தோல் பிரச்சனைகள் பூரணமாக குறையும்.

இளமை:

உப்பு தண்ணீர் குளியலை தொடர்ந்து செய்து வந்தால், சருமத்தை கொழுக்க வைத்து சரும நீர்ச்சத்தை சமநிலைப்படுத்தும். இதனால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகள் குறையும்.

மன அழுத்தத்தை போக்கும்:

அழுத்தத்தை போக்கும் ஒன்றாக விளங்குகிறது உப்பு தண்ணீர் குளியல். உப்பு தண்ணீரில் குளித்த பிறகு, உங்களுக்கு மன அமைதி , சந்தோஷம், நிம்மதியும் கிடைக்கும்.

அசிடிட்டி:

உப்பு தண்ணீரில் அல்கலைன் குணம் அடங்கியுள்ளதால், இந்த தண்ணீரில் குளிக்கும் போது அசிடிட்டியை போக்கும்.

எரிச்சல்:

உப்பு நீர் ஆண்டிசெப்டிக், ஆண்டி பாக்டீரியாவாக செயல்படும். மேலும்தண்ணீரில் உப்பு சேர்த்து குளிப்பதால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகளும் குணமாகும். ஆகவே அடிக்கடி உப்பு நீரில் குளித்து வருவது நல்லது.

பாத தசை:

எப்போதுமே நகர்ந்து கொண்டிருக்கிற மற்றும் அதிக அழுத்தம் நிறைந்த உறுப்பு பாதம். உப்பு தண்ணீரில் குளித்தால், தசை வலியும் விறைப்பும் குறையும். மேலும் பாதத்தில் ஏற்படும் நாற்றத்தையும் குறைக்கும்.

ஈரப்பதம்:

சருமம் ஈரப்பதத்துடன் இருப்பது நல்லது. உப்பு தண்ணீரில் உள்ள மெக்னீசியம் அந்த நீரை உங்கள் சருமத்துடன் இணைக்கும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்து சரும அணுக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்.

தசை வலி:

கீல்வாதம், சர்க்கரை நோய், விளையாடுவதால் ஏற்படும் காயங்களினால் உண்டாகும் தசை வலிகள் ஆகியவை உப்பு தண்ணீரில் குளித்து வந்தால் குணமாகும்.

சருமம்:

உப்பு தண்ணீரில் குளிக்கும் போது அதிக கனிமங்களும், ஊட்டச்சத்துக்களும் உடலுக்கு கிடைக்கும். இதனால் மெக்னீசியம், கால்சியம், புரோமைட், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் சரும துளைகளுக்குள் உறிஞ்சப்படும். இது உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கும். இதனால் சருமம் பளபளப்பாக மாறும்.