அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

46

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கோயில்!

நாகபட்டினம் மாவட்டம் திருநின்றியூர் பகுதியில் உள்ள கோயில் மகாலட்சுமீஸ்வரர் கோயில். சுயம்பு லிங்கமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தாயார் உலகநாயகி அம்மன்.

கோயிலின் ராஜகோபுரம் 3 நிலைகளை கொண்டது. கோயில் பிரகாரத்தில் விநாயகர், தெட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே இருக்கும் முயலகன் இடது புறமாக திரும்பி கைய்ல் நாகத்துடன் இருக்கிறான். அவனுக்கு அருள் செய்யும் வகையில் சுவாமி காட்சி தருகிறார். அனுஷம் நட்சத்திர நாளனறு பிரகாரத்தில் இருக்கும் விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. கடன் பிரச்சனை இருப்பவர்கள் விநாயகரை வழிபட கடன் பிரச்சனை சரியாகும் என்பது நம்பிக்கை.

அனுஷம் நட்சத்திரக்காரர்களின் குணம்:

அரசாங்கத்தால் பாராட்டு பெறுவார்கள். பிறரது மனம், குணம் அறிந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்களிடம் செல்வாக்குடன் திகழ்வர். எப்போதும் மேன்மையான அந்தஸ்து உள்ள பதவிகளில் இருப்பார்கள்.

அனுஷம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். மற்ற தோஷங்களால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கவும் இங்கு பரிகார பூஜை செய்து கொள்கின்றனர்.

தல பெருமை: அனுஷம் நட்சத்திரம்:

சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பர நடராஜனை தரிசனம் செய்து விட்டு இத்தலம் வழியாக சென்று திரும்புவான். அப்படி ஒருநாள் மன்ன்ன் இந்த வழியாக இந்த தலத்தை கடந்து சென்ற போது காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை எரிய வைக்க எத்தனை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், அந்த காவலாளிகள் இந்த தலத்தை கடந்து சென்ற போது திரி தானாகவே எரியத் தொடங்கியது. இப்படி ஒவ்வொரு முறையும் காவலாளிகள் அந்த தலம் வழியாக செல்லும் போதும் திரி அணைவதும், கடந்து சென்ற போது திரி தானாகவே எரிவதும் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஒருநாள் இந்தப் பகுதியில் பசுக்கள் மேய்த்துக்கொண்டிருந்தவனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் ஏதும் நிகழுமா? என்று கேட்டான். அதற்கு, ஒரு இடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தின் மீது பசு தானாக பால் சுரக்கும் என்று பசுக்களை மேய்ப்பவன் கூறினான். மன்னன் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சிவலிங்கம் இருப்பதைக் கண்டார்.

சிவலிங்கத்தை வேறொரு இடத்தில் வைத்து அதற்கு கோயில் கட்ட தோண்டியபோது ரத்தம் வெளிப்பட்டது. பிறகு இங்கேயே அனுஷம் நட்சத்திர நாளன்று கோயில் எழுப்பிவிட்டார். மேலும், திரி அணைந்த தலம் என்பதால், இந்த ஊர் திரிநின்றியூர் என்றும், மகாலட்சுமி வழிபட்டதால் திருநின்றியூர் என்றும் பெயர் பெற்றது.

சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒருவரையொருவர் நேரே பார்த்தவாறு அமைக்கப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். சிவலிங்கத்தின் பாணத்தில் கோடரி வெட்டிய தழும்பு இன்றும் தெரிகிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலில் வழிபடுவோர் பயம், பாவம், நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளன்று அல்லது அடிக்கடியோ, தங்களது பிறந்தநாளன்றோ, கல்யாண நாளன்றோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ இத்தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சந்தனக்காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

சிறப்பம்சம்:

சோழ மன்னன் ஒருவன் தினந்தோறும் சிதம்பர நடராஜனை தரிசனம் செய்து விட்டு இத்தலம் வழியாக சென்று திரும்புவான். அப்படி ஒருநாள் மன்ன்ன் இந்த வழியாக இந்த தலத்தை கடந்து சென்ற போது காவலாளிகள் கொண்டு சென்ற திரி அணைந்து விட்டது. அதனை எரிய வைக்க எத்தனை முயற்சித்தும் முடியவில்லை. ஆனால், அந்த காவலாளிகள் இந்த தலத்தை கடந்து சென்ற போது திரி தானாகவே எரியத் தொடங்கியது. இப்படி ஒவ்வொரு முறையும் காவலாளிகள் அந்த தலம் வழியாக செல்லும் போதும் திரி அணைவதும், கடந்து சென்ற போது திரி தானாகவே எரிவதும் வழக்கமாக இருந்துள்ளது. ஆனால், காரணம் என்னவென்று தெரியவில்லை.

ஒருநாள் இந்தப் பகுதியில் பசுக்கள் மேய்த்துக்கொண்டிருந்தவனிடம் இத்தலத்தில் மகிமையான நிகழ்ச்சிகள் ஏதும் நிகழுமா? என்று கேட்டான். அதற்கு, ஒரு இடத்தில் சுயம்புவாக இருக்கும் லிங்கத்தின் மீது பசு தானாக பால் சுரக்கும் என்று பசுக்களை மேய்ப்பவன் கூறினான். மன்னன் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சிவலிங்கம் இருப்பதைக் கண்டார்.

சிவலிங்கத்தை வேறொரு இடத்தில் வைக்க முயற்சித்த போது அதில் தோல்வியடைந்தான். இதையடுத்து, அனுஷம் நட்சத்திர தினத்தன்று அதே இடத்திலேயே பிரதிஷ்டை செய்தான் மன்னன். சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒருவரையொருவர் நேரே பார்த்தவாறு அமைக்கப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இத்தலத்தில் வேண்டிக் கொள்கின்றனர். சிவலிங்கத்தின் பாணத்தில் கோடரி வெட்டிய தழும்பு இன்றும் தெரிகிறது. பரசுராமர் வழிபட்ட சிவன் பிரகாரத்தில் பரசுராமலிங்கமாக காட்சி தருகிறார்.

இந்தக் கோயிலில் வழிபடுவோர் பயம், பாவம், நோய்கள் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் என்று சம்பந்தர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது நட்சத்திர நாளன்று அல்லது அடிக்கடியோ, தங்களது பிறந்தநாளன்றோ, கல்யாண நாளன்றோ, துவாதசி, வரலட்சுமி நோன்பு ஆகிய நாட்களிலோ இத்தலத்தில் உள்ள சிவபெருமானுக்கு சந்தனக்காப்பிட்டு அதில் மாதுளை முத்துக்களை பதித்து வழிபாடு செய்தால் வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு:

ஜமத்கனி மகரிஷி, தனது மனைவி ரேணுகா, கந்தர்வன் ஒருவனது அழகில் மயங்கி அவனது அழகை நீரில் கண்டு வியந்ததால் ரேணுகாவின் தலையை வெட்டும்படி தனது மகன் பரசுராமனிடம் கூறினார். பரசுராமனும் தனது தந்தையின் ஆணைப்படி தாயின் தலையை வெட்டினான். அதன் பிறகு தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பிக்கச் செய்தான். தாயை கொண்ட தோஷம் நீங்க இத்தலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு மன அமைதி பெற்றான்.

ஜமத்கனி மகரிஷியும் இந்த பாவத்துக்கு விமோட்சனம் வேண்டி சிவனை வணங்கி மன்னிப்பு கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் இருவருக்கும் காட்சி கொடுத்து அருள் புரிந்தார். மகாலட்சுமி தேவி இத்தலத்தில் சிவனை வழிபட்டு அருள் பெற்றாள். ஆதலால், இத்தல இறைவன் மகாலட்சுமீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். அம்மன் உலகநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். மகாலட்சுமி வழிபட்ட தலம் என்பதால், இந்த ஊர் திருநின்றியூர் என்று பெயர் பெற்றது.