அனுஷ நட்சத்திரமான இன்று ஸ்ரீ மஹா பெரியவா பற்றி தெரிந்து கொள்வோம்!

24

அனுஷ நட்சத்திரமான இன்று ஸ்ரீ மஹா பெரியவா பற்றி தெரிந்து கொள்வோம்!

புஷ்பேஷு ஜாதி, புருஷேஷு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி” – என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. இதன் பொருள், புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம்.

ஸ்ரீ மஹா பெரியவா பீடம் ஏறிய வரலாறு:

தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு மே 20 அனுஷ நக்ஷத்திரத்தில் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தில் பிறந்த மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும். அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராசார்யார் சித்தி அடைந்து விட்டார்.

ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராசாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சி புரம் செல்கிறார் பரமாசார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்த சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது. சங்கராசாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சகட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும் ஆகையால் அவரையே அடுத்த சங்கராசாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாசார்யாள்,

நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா…’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.

காஞ்சி மகா பெரியவாளின் ஜன்ம நட்சத்திரம் அனுஷம். மாதந்தோறும் வருகிற அனுஷ நட்சத்திர நாளில், கண்கண்ட தெய்வமாகத் திகழும் காஞ்சி மகானை ஆராதனை செய்து, வணங்கிப் போற்றினால், குருவருளும் நிச்சயம்; திருவருளும் உறுதி.

ஹர ஹர சங்கர!

ஜெய ஜெய சங்கர!!