அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 2!

73

அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள் – பகுதி 2!

 1. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் ஒரிசா மாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்.
 2. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் திருவண்ணாமலை
 3. கார்த்திகை தீபத்திருநாளில் அவதரித்த ஆழ்வார் திருமங்கையாழ்வார்
 4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் பரணிதீபம் (அணையா தீபம்)
 5. அருணாசலம் என்பதன் பொருள் அருணம்+ அசலம்- சிவந்த மலை
 6. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்.
 7. திருவண்ணாமலையில் பவனி வரும் சோமஸ்கந்தரின் பெயர் பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்.
 8. “”கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு 1997, டிசம்பர் 12
 9. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
 10. கார்த்திகை நட்சத்திரம் தெய்வங்களுக்கு உரியது சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
 11. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை).
 12. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் அனுமன்
 13. நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது? திருவாசகம்
 14. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
 15. மனிதப் பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்)
 16. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? 108
 17. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் காரைக்காலம்மையார்.

38.”மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் அப்பர் (திருநாவுக்கரசர்)

 1. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் ஆணவம் (ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்) முயலகன்
 2. பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் குற்றாலம்.